Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Friday, March 20, 2009

இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு

இலங்கை ஒரு தீவு. அது இரண்டு தேசங்களைக் கொண்டது. ஒன்று தமிழர் தேசம். மற்றையது சிங்களத் தேசம். ஆனால் இந்நாட்டின் வரலாறு சிங்கள தேசத்தின் வரலாறாக மட்டுமே எழுதப்பட்டு தமிழர் வரலாறு திட்டம்மிட்டு மறைக்கப்பட்டு அல்லது சித்தரிப்புக்குற்பட்டே வருகிறது.தமிழர்கள் இறைமையைப் போர்த்துக்கேயரிடம் இழந்ததிலிருந்து இன்று வரையும் தொடர் அவலங்கள் மட்டுமே எஞ்சி உள்ளது.இலங்கைத்தீவில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இரு இனங்களான சிங்கள இனமும், தமிழினமும் தனித்தனியாக ஆட்சியுரிமை செலுத்தி வந்தன.ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் (1635-1795) தமிழீழ நிலப்பகுதிகளை மரபு வழியாகப் பேணி தமிழர்களுக்கென தனி நிர்வாகத்தையும், சிங்களவருக்கென தனி நிர்வாகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.கி.பி.1796 இல் பிரித்தானியரின் ஆட்சிக்குள் வந்தன. கி.பி.1619 இல் போர்துக்கேய அரசைச் சென்றடைந்த தமிழீழ இறைமை கி.பி.1658 இல் ஒல்லாந்தரையும், பின்னர் கி.பி.1796 இல் பிரித்தானியரையும் சென்றடைந்து, கி.பி.1833 தொடக்கம் கி.பி.1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் நாள் வரை 105 ஆண்டுகளுக்குச் சிங்கள நிலமும், தமிழ் நிலமும் ஒரே ஆட்சி முறையில் தொடர்ந்து வந்தது.இலங்கையிலிருந்து அகன்ற பிரித்தானியர் ஒற்றையாட்சி முறையின் கீழ் முழுமையான ஆட்சிப் பொறுப்பை சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்தனர்.தொடக்க காலத்தில் இருந்து தமிழர்களின் உரிமைகள் பறிகப்பட்ட நிலையில் அப்போதைய தமிழ்த் தலைமைகள் தமிழரின் உரிமைகளுக்காக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.1958, 1961 இனக்கலவரங்களை ஏற்படுத்தி தமிழர்களின் போராட்டங்களை சிங்களத்தரப்பு நசுக்கியது. மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் தலைமைகளுடன் உடன்படிக்கைகளை எழுதி நிறைவேற்றாது கிழித்தெறிந்தனர்.ஏமாந்த தமிழ்தலைமைகள் ஒன்று சேர்ந்து ஒரே தமிழ்த் தலைமை உருவாக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழீழக் கோரிக்கையை முழுமையாக ஆதரித்தனர்.பயங்கரவாத தடைச்சட்டத்தினைக் கொண்டு வந்து தமிழர்கள் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டனர். சிங்கள அரசு 1983 இல் வரலாறு காணாத பாரிய இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது.அறவழியில் போராடி தமிழர் உரிமைகளை வென்றெடுக்க முடியாது போன தமிழர் போராட்டமே ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.இப்போராட்டம் சில சொந்த சுய இலாபங்களுக்காக குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களின் இலங்கை அரசின் அடிவருடிக் கொள்கையினால் பல பின்னடைவுகளை சந்தித்து வருகின்றது. எம்மினத்தின் போரட்டச் சக்தியை சீர்குலைக்கும் நோக்கில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்களுக்கு ஆயுதக்குழுவாகவும் அரசியல் பகடைக்காய்களாவும் மாறி தமிழர்களின் நலனுக்கு தமிழனே எதிராக, தமிழினத் துரோகிகளாக உண்மையை பொய்மையாக்கி, பொய்மைக்கு துணைப்போகும் துர்ப்பாக்கிய நிலைத்தான் இலங்கைத் தமிழர்களின் தலைவிதியாகி உள்ளது.இவர்களின் விசமப் பிரச்சாரத்தால் உண்மை எது? பொய்மை எது என அறியாதப் பலரின் தவறான கருத்துக்கணிப்புகளையும் ஆங்காங்கே வலைப்பதிவுகளிலும் காணக்கூடியதாகவே உள்ளது.இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையின் தமிழரின் வரலாறும் அவர்களது போராட்டத்தின் தன்மைப் போன்றவை தக்கச் சான்றுகளுடன் வெளிவருவது காலத்தின் தேவையாகியுள்ளது.கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் பல்வேறு மட்டத்தினரையும் கருத்திற்கொண்டு பல மூல ஆவணங்களின் ஆதாரங்களுடன் ஆய்வுசெய்து உள்ளதை உள்ளவாறே ஒரு வரலாற்று ஆவணத்தை நூலாக எழுதியுள்ளார் எனும் ஒரு செய்தி மகிழ்ச்சியானதாகவே இருக்கின்றது.இந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட இந்நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளதாம்.இலங்கை, இந்தியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பிரித்தானியா, பிரான்சு, சுவிற்சலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலுள்ள பல ஆவணக்காப்பகங்களில் இந்நூலாசிரியர் பல மாதங்களாகத் தேடி எடுக்கப்பட்ட முக்கியமான ஆதாரங்களே இந்நூலின் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் போர்த்துக்கேய ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள், டச்சு ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள், பிரித்தானிய ஆவணக்காப்பகங்களில் கிடைக்கப்பெற்ற முதல்தர ஆவணங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் கல்வெட்டு ஆதாரங்கள் போன்றவற்றின் ஆதாரங்களுடன் எதுவித பக்கசார்பும் இன்றி உள்ளதை உள்ளவாறே பதிவு செய்யப்பட்டுள்ளனவாம். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை பல்கலைக்கழக தொல்லியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது பெறப்பட்ட தொல்லியல் சான்றுகளும், கல்வெட்டுகளும் இந்த ஆய்வின் மிக முக்கிய ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளனவாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.