Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Monday, April 20, 2009

கடற்புலிகள் வரலாறு


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்குகின்றார்.

கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.

•ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது.
•1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
•1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.



தாக்குதல் முறை

பல கடற்கலங்களில் அணிகளாக சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.
கடற்புலிகள் பிரிவு

•கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு

கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம்.

இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் . கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.

இவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களாக கருதப்படுபவை

*கொழும்புத் துறைமுகத் தாக்குதல்
*1995 ஏப்ரல் 19 திருகோணமலை துறைமுகத்தில் ரணசுறு சூரயா மீது தாக்குதல்
*கற்பிட்டிக்கடற்பரப்பில் வைத்து சகரவர்த்தன கப்பல் மீதான தாக்குதல்.

....................................................................................

•விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி

கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது கடற்புலிகளின் ஒரு அங்கமாக இருக்கும் ஈரூடகப் படையணி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.

.....................................................................................

•புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் பல காலமாக நீர்மூழ்கி கப்பல் பிரிவு ஒன்றை கட்டமைப்பதற்காக முயற்சி செய்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புலிகள் இதைப் பற்றி எந்த வித அதிகார பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. இந்த தகவலை இந்திய புலனாய்வுத் துறையே வெளிப்படித்தியிருப்பதாக்க ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.


....................................................................................

•தமிழர் கப்பற்கலை

தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.