எப்போதும் கம்ப்யூட்டர் கேம், இன்டர்நெட் என்று கம்ப்யூட்டரே கதியா?
சாப்பாட்டை மறந்து விட்டு கம்ப்யூட்டரில் மூழ்கி விடுகினரா எப்போதும்?
கம்ப்யூட்டரில் விளையாடி விட்டு அடிக்கடி கோபப்படுகின்றனரா?
இப்படியெல்லாம் உங்கள் குழந்தைகள் செய்தால், மனோதத்துவ டாக்டரை பார்க்க இது சரியான தருணம்;
இனியும் தாமதிக்கக்கூடாது! இது குறித்து, அமெரிக்க மனோதத்துவ ஆய்வு இதழில் நிபுணர்கள் கூறியிருப்பதாவது:
மது குடிப்பது, போதை மருந்து சாப்பிடுவதை விட, இன்டர்நெட், கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது மோசமானது; கம்ப்யூட்டரே கதி என்று இருப்போர் அதற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.
இப்படி இருப்பதால் அவர்களால் சரிவர சிந்திக்க முடிவதில்லை சரியான நேரத்துக்கு சாப்பிட முடிவதில்லை சரியான தூக்கம் இல்லை. அவர்கள் மனநிலையும் மாறுகிறது. கோபம் அதிகரிக்கிறது கம்ப்யூட்டர் கேம்கள் பெரும்பாலும் அசகாயசூரத்தனமானவை கோபம், ஆத்திரம், பராக்கிரமம் போன்றவற்றை காட்டும் கேரக்டர்களை கொண்ட டிஜிட்டல் விளையாட்டுகள்.
அவற்றை விளையாடும் குழந்தைகள், மனதில் அமைதியான சுபாவம் மாறி விடுகிறது. பெற்றோர் சொல்வதை கேட்கும் பண்பு மறைகிறது. அடிக்கடி கோபப்படுவது சகஜமாகிறது. அது தான் சரி என்று நினைக்கும் அளவுக்கு மாறிவிடுகின்றனர்.
சிறுவயதில் இருந்தே, கம்ப்யூட்டருக்கு அடிமையாகி விட்டவர்கள், பெரியவர்களாகும் போது, பெரும் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். கம்ப்யூட்டருக்கு அடிமையானவர்கள், திருமணம் செய்த பின் மனைவி யுடன் சரிவர குடும்பம் நடத்த முடியாமல், படுக்கை அறையிலும் “லேப் டாப்’ கம்ப்யூட்டரே கதியாக இருக்கின்றனர்.
கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில், எவ்வளவோ அறிவுப்பூர்வமான விஷயங்கள் உள்ளன அதே அளவுக்கு தீய விஷயங்களும் உள்ளன. ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்த ஒருவர் நாளடைவில் செக்ஸ் விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.
போகப்போக அவர்கள் உண்மையான நிலைக்கு வர முடியாமல் இன்டர்நெட்டில் செக்ஸ் படங்கள் பார்ப்பதில் அடிமையாகி விடுகிறார்.இது போன்று பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம், அவர்கள் சிறுவயதில் காட்டிய கம்ப்யூட்டர் வெறித்தனம் தான். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Thursday, April 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment