சிங்களக் காவல்துறையினரின், ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு அரசுக்கு சுட்டிக்காட்டி வந்தனர். ஆனால் சிறீலங்கா அரசோ அதுபற்றிய அக்கறையின்றி இருந்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தைகளில் முறுகல் நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த போது ஆனி 10, இராணுவத்தினரின் அத்துமீறில்கள் பற்றிப் பலமுறை சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளில் 1990 இல் தென்தமிழீழத்தில் உள்ள கல்முனை என்ற இடத்தில் இஸ்லாமியத் தமிழர் ஒருவருக்கு எதிராக சிங்களக் காவற்துறையினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் சிங்களக் காவல்துறையினருக்கும் இடையில் எழுந்த சச்சரவு இறுதியில் யுத்தமாக மூண்டது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உடனடியாகவே இவ்யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் சிறீலங்காவின் சிங்கள இனவாத அரசும் அதன் படைகளும் தமிழின அழிப்பும் தமிழ்மண் பறிப்புமே தமது இறுதி முடிவு என்ற ரீதியில் செயற்பட்ட போது தமிழீழ மக்களையும் தமிழீழ மண்ணையும் பாதுகாப்பதற்குச் சிறீலங்கா அரசு ஏவிவிட்ட யுத்தத்தை எதிர்கொள்வதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.
1991 புரட்டாதி 1ம் நாள் தமிழீழப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அப்போதைய அரசியல், இராணுவ நிலைமைகள் பற்றி விளக்கும்போது 'தமிழீழப் போர் 2 தொடங்கும் போது இருந்த பல சிங்கள இராணுவ முகாம்கள் தற்போது இல்லை. கொக்காவில், மாங்குளம் போன்ற இடங்களில் இருந்த இராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதால் வன்னி;ப் பிரதேசத்தின் பெரும்பகுதி எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. யாழ் கோட்டை முகாம் அழிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்தின் நகரப்பகுதியும் விடுவிக்கப்பட்டது. ஆனையிறவுப் போரில் மரபு ரீதியான இராணுவ அணியாக எதிரிகளுடன் நேரடியாக மோதி அழிக்கும் நிலையின் முதற்படியை எடுத்து வைத்Nதூம். பெரிய எண்ணிக்கையிலான இராணுவத்தை நீண்ட நாட்களாக தடுத்து வைத்துப் போரிட்டோம்.
ஆனையிறவுப் போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அஞ்சினால் யுத்தம் நடத்த முடியாது. இழப்புக்களை வளர்ச்சியின் ஊன்று கோலாகக் கருதவேண்டும். 10-07-91 இல் ஆனையிறவுப் போர் ஆரம்பித்து 23-08-91 வரையிலான 43 நாள் போரில் 564 போராளிகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்ததைவிட பெரியளவில் படையினர் இறக்கப்பட்டு நீண்ட நாட்கள் இடம் பெற்ற யுத்தத்தைப் பார்த்தால் எமது தரப்பிலான இழப்பு பெரிதெனச் சொல்ல முடியாது. துன்பங்களை அனுபவிக்கும் மக்களிடம் அடுத்து என்ன என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். எனினும் பெரிய அளவில் அவர்கள் அணிதிரள வேண்டும். போராட்டத்தில் ஏற்படும் இழப்புக்களை உடனுக்குடன் ஈடுசெய்ய வேண்டும்.
மக்கள் முழுமையாக எம்மோடிணைந்து எமது கஷ்டதுன்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நிபந்தனையற்ற வகையில் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு எப்போதும் தயாரக இருக்கிறோம். ஆனால் பேச்சுவாhத்தைக்குரிய சூழ்நிலையை சிறீலங்கா அரசுதான் உருவாக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசுக்கு எதிராகத்தான் போராடுகிறார்கள். இந்திய அரசு விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.
மலையகத் தமிழ்மக்களின் தொடரும் துன்பங்களுக்கு மலையகத் தலைமைகளின் தொடரும் துரோகமே காரணம் என்பதை மலையகத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஆயுதத்தாலும் எத்தகைய குண்டு வீச்சாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட முடியாது" என்றார்.
Tuesday, May 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment