இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு 1993 ஆடி 5இல் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையில், 'கப்டன் மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பம் ஆகியது. என்றுமே உலகம் கண்டிராத, எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது. கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அப10ர்வமான பிறவிகள்.
இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மனித நேயம் படைத்தவர்கள். கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோ திடத்திற்கும், உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகின்றோம். இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத பூடகமான இரகசியத் தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே கரும்புலி என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும்.
ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது. இந்த இரகசியத் தன்மை கரும்புலிகளின் செயற்பாட்டு வெற்றிக்கு மூலதாரமானது. இது கருப்புலிகளின் சகாப்தம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும். சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்", என்று தெரிவித்தார்.
Tuesday, May 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment