Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, May 5, 2009

ஆரம்பகால புரட்சித் தோழர்கள்

பிரபாகரன் அவர்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவாகளாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கதை;தை ஆரம்பிக்கும்போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது.


புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் பிறந்தது.

1970ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கடுமையான அடக்குமுறையும், சகலதுறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட விதமும், தமிழ் இளைஞர்;கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது. சிங்கள இன வெறி ஆட்சிக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டுமென்று இளைஞர்கள் துடித்தனர். தமிழர்களின் கட்சிகளோ அல்லது மற்ற சிங்கள இடதுசாரி இயக்கங்களோ இந்த இளைஞர்களின் மனக்கொதிப்பை புரிந்து கொள்ளவில்லை. கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களுக்காகப் போராடச் சரியான தலைவர்களோ, இயக்கங்களோ இல்லை என்று இளைஞர்கள் கருதினார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான அறப்போராட்டங்களைத் தமிழ்த் தலைவர்கள் நடத்தியிருந்த போதிலும் கூட, இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அவர்கள் ஒதுக்கியே வைக்கப் பட்டிருந்தனர். பாராளுமன்றத்தில் அவர்கள் எழுப்பிய குரலுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இல்லை. கானகத்தில் காரிருளில் எழுப்பப்பட்ட குரலாக அவை ஒலித்தன. சிங்கள இன வெறிக்கு இரையாகிப்போன இடதுசாதிக் கட்சிகளும் கூட்டுச்சேர்ந்து தமிழருக்கு எதிராகச் செயற்பட்டன. தமிழர்களின் போராட்டங்களை அவர்களும் அலட்சியம் செய்தனர். எனவே தமிழ் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகளை நம்பக் கொஞ்சமும் தயாராக இருக்க வில்லை.

இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் சூனியநிலை ஒன்று உருவாயிற்று. சிங்கள பேரினவாதிகளின் தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து, தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்நடத்திச் செல்லப் ~புரட்சிகரமான அரசியல் அமைப்பு~ ஒன்று இன்றியமையாதது என்பதைத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினார்கள்.

இதனால் ~தமிழ் மாணவர் பேரவை~ என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தமிழ் மாணவர் மத்தியில் மாபெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலமே சிங்கள இனவெறியர்களின் கொடுமைகளில் இருந்து தமிழர்கள் விடுதலை பெறமுடியும் என்பதை மெல்ல மெல்லத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர்.

தமிழ் மாணவர்கள் பேரவை பலம் பொருந்திய இயக்கமாக வளர்ந்தது. இதில் தீவிரவாதக் குழுவின் முக்கியமானவராக பிரபாகரன் அவர்கள் இயங்கினார். அக்குழுவில் வயதில் குறைந்தவராகப் பிரபாகரன் அவர்கள் இருந்தபடியால் ~தம்பி~ என்ற செல்லப் பெயர் கொண்டு மற்றவர்களால் அழைக்ப்பட்டார். (இன்றும் இப்பெயர் கொண்டு பிரபாகரன் அவர்களை அழைப்பவர்கள் இருக்கிறார்கள்) தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்தத் தீவிரவாதக் குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டடோர் இருந்தனர்.

இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவி;க்கும் வகையில் அரச பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை போறுப்பேற்றுக் கொண்டு பிரபாகரன் அவர்கள் உட்பட நான்குபேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். 16 வயதுச் சிறுவனாக இருந்த பிரபாகரன் அவர்கள் மட்டும் மனத்துணிவுடன் சென்று அரச பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும், ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன. அவரைவிட வயது மூத்தவர்கள் எல்லோரும் அவரின் துணிவையும் பொறுப்பெடுத்த காரியத்தையும் பாராட்டினார்கள். தமிழ் தீவிரவாதத்தின், தமிழ் தீவிரவாத இயக்கத்தின் முன்னோடியாகத் தோன்றிய பிரபாகரன் அவர்கள் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.

அதே நேரத்தில் தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்த சிங்கள அரசாங்கம் அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரைக் காவற்துறையினர் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். சித்திரவதை தாங்கமுடியாமல் அவர்களில் ஒருசிலர் தமது சக கூட்டாளிகளைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். சிங்கள காவற்துறையின் கொடுங்கோலர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். (இக் காலத்தில் கொழுப்பிலிருந்த 4ம் மாடி என்ற கட்டிடம் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதற்கு பெயர் பெற்ற இடமாகும்.) அதனால் பிரபாகரன் அவர்கள் தமிழகத்திற்குச் சென்றார்.
பிரபாகரன் அவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் 1972 ன் ஆரம்பப் பகுதியில் தமிழீழம் திரும்பினார். ஆங்காங்கு சிதறுண்டு இருந்த இளைஞர்களிடையே காணப்பட்ட தீவிரவாதச் செயற்பாடு, ஒரு புரட்சிகர இயக்கத்தை, புரட்சிகர அரசியற் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு புரட்சிகர தலைமையை நாடி நின்றது. இப்புரட்சிகரச் சூழ்நிலையில்தான் ~புதிய தமிழ்ப் புலிகள்~ என்ற இயக்கம் 1972இன் நடுப்பகுதிகளில் தலைவர் பிரபாகரன் அவர்களால் அவரின் 17வது வயதில் தொடக்கப்பட்டது. இவ் இயக்கம் மிகவும் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டதாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.