Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, November 2, 2010

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்
நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை

பாடும்பறைவகள் வாருங்கள்
புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்
யாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம்
காலங்கள் பாடுங்கள்
(பாடும்பறைவகள்……………………..

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது
நீதிக்கு சோதனை தந்தது
நாங்கள் சிந்திய ரத்தங்கள்
காய்ந்திடும் முன்னரே கால்களில்
வீழ் எனச் சொன்னது
வேங்கைகள் இதை தாங்குமா
குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?
வீரன் திலீபன் வாதாடினான்
பசி தீயில் குதித்து போராடினான்


வாயில் ஒருதுளி நீரதும் இன்றி வாசலில் பிள்ளை கிடந்தான்
நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது ஆணவத்தோடு நடந்தான்
சாவினில் புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது
பார்த்து மகிழ்ந்தது ராணுவம் புலிச் சாவுக்கு ஆதிக்கம் காரணம்

அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய் - எங்கள்
மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்
துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது
நெஞ்சினில் ரத்தம் வழிந்தது உந்தன் ஒப்பந்தம் இங்கு கிழிந்தது..

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.