Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Monday, March 30, 2009

சாவோம் என்றல்ல வாழ்வோம் என்ற நம்பிக்கையில்

எம் தேசத்தில் வாழ்ந்து இன்டைக்கு உலகமெலாம் வியாபித்து விரிந்திருக்கிற எங்கட உறவின் கொடிகளுக்கு வணக்கம். நாங்கள் சாவின் விளிப்பில நிக்கிறம். ஆனால் சாவைஎதிர் பார்த்தில்லை என்றதை உங்களுக்கு ஒரு மடல் வரைலாம் என்று நினைச்சன். இருந்தாலும் இப்ப பறந்த மிக் மிகையொலியின்ர இரைச்சல் கேட்க பங்கருக்க கடிதம் எழுதின பேப்பரோட இருக்கிறன். அது போய் இப்ப ஐஞ்சு நிமிடம் தான் ஆச்சு ஆனால் அதுக்குள்ள பாழாய்ப்போன ஆமி செல்லடிச்சு கொண்டிக்கின்றான்.

இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால வந்த தம்பி மார் கொஞ்சபேர் வந்து பங்கரை தயார் நிலையில வைச்சிருக்கோ நாங்கள் சாகிறதுக்பு பிறந்தாக்கல்ல எனறு அறிவுரை சொல்லீட்டு போனவை. இப்பிடித்தான் தேவிபுரத்தில முந்தநாள் நடந்த செல் அடிச்சதில ஆமியின்ர வல்வளைப்புக்கு பயந்து நெடுங்கேணி மாறாயிலுப்பையில இருந்து ஓடி வந்து இருந்த எங்கட சனம் செத்தும் காயப்பட்டும் படுக்க இடம் இல்லாத புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில இருக்கினம்.
நாங்கள் சாவுக்குள்ள வாழுறம். ஆனாலும் சாவோம் என்று நம்பல்ல. தலைவரின்ர மனதை அறிந்த மக்களாய் நாங்கள் இருக்கிறம் நீங்கள் உங்க இருந்து கொடுக்கிற கரம் எங்களை வாழ வைக்கும். தமிழரின்ர சோகத்தை போக்கும்

நாங்கள் ஓடி ஓடி களைச்சு போட்டம். ஆனா இன்னும் நாங்கள் நம்பிக்கை இழக்கல்ல. அந்த நம்பிக்கை என்றது தலைவரின்ர முடிவுக்காய் காத்திருக்கிறோம். தலைவரின்ர முடிவு என்டுறது எப்பவும் எங்களுக்கு சாதகமாய்த் தானிருக்கும் ஆனால் அவரின்ர கரத்தை பலபப்டுத்திறத எங்கட கையில இல்லை.

நாங்கள் செத்தாலும் எங்கட மண்ணை கண்டிப்பா மீட்பம்.. எங்களி;ட்ட இந்த பேராட்டத்துக்கு கொடுக்க உயிர் மட்டும் தான் மிச்சமிருக்கும். நீங்கள், நீங்கள் எல்லாரும் பொருள் வளத்தை அள்ளி;க்கொடுங்கோ.

இங்க எங்கட மண்ணில சாகிற ஒவ்வொரு வீரன்ர கனவுக்கு நீங்கள் தான் உருவம் கொடுக்க வேணும் தமிழீழம் என்றது எங்கட கனவு மட்டுமில்ல. இந்த விடுதலைப் போரில நாங்கள் நிச்சயம்வெல்லுவம் அப்ப இங்க இருக்கிற ஆக்கள் மட்டுமில்ல நீ;ங்களும் தான் பெருமையடையப் போறீங்கள். நீங்கள் மட்டுமில்ல உலகத்தில வாழுற எல்லாத்தமிழரும் தான் மகிழ்வடைய போயினம். அப்ப நீங்கள் தந்த கரமும், எங்கட பெடியலின்ர அர்பணிப்பும் பேசப்படும். நீங்கள் இந்த விடுதலையில, இந்த போராட்டதில ஒரு பங்காளியாதன்னும் பேசப்படுவீர்கள்.

ஆனால் ஒன்றும் மட்டும் உண்மை உறவுகளே, நாங்கள் செத்து மடிவோம் என்று இங்கு வாழவில்லை. உங்களால் வாழ்வோம் என்ற நம்பிக்கையும் தலைவரால் மீட்கப்படுவோம். ஏன்ற உறுதியும் கொண்டுள்ளோம்.
தாயக தேசத்தை தாண்டி உலகெங்கும் வாழும் உறவுகளே

நாங்கள் சிந்தும் கண்ணீரின் விலை விடுதலை என்ற ஒன்றாய் மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் குருதியில் ஈழத்தின் பிறப்பு உருவானது என்ற செய்தி உலக வரலாற்றில் எழுதப்படும் அந்த நாளுக்காய் சிங்கள அரக்கர்களின் கொடிய வதைகளையும், அவலத்தையும் நாங்கள் சகித்துக் கொண்டிருக்கின்றோம். உங்கள் உறவுகளுக்கான குரலையும், வளத்தையும் கொடுங்கள் என்று இரஞ்சிக் கேட்டுக்கொண்டே விடை பெறுகின்றேன்.


வன்னியிலிருந்து ஒருவன்

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.