Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Monday, March 30, 2009

நம்புங்கோ தமிழினம் மீண்டும் சிரிக்கும்!

யுத்தம் ஆம் யுத்தத்தின் கோரப்பிடிக்குள்ள தான் நாங்க நிக்கிறம். ஷெல் எப்பவாவது இருந்திட்டு அடிச்சா நாங்க பயந்து ஓடுவம் ஆனால் இப்ப எல்லாம் நான் ஷெல்லுக்கு பயந்து ஓடுறதில்லை. களத்தில நிக்கிற எங்கட பிள்ளையள போல நாங்களும் களத்துக்கு கிட்ட தான் நிக்கிறம்.

ஓவ்வொரு நாளும் நாங்கள் எங்கட பெடியளோட ஓடிக்கொண்டிருக்கிறம். மழையும் வெயிலும், பனியும் குளிரும் அட ஆமியின்ர ஷெல்லும் கிபிரின்ர குண்டும் எந்த மட்டுக்கு என்று கேள்வி கேட்பம் என்று நான் சொல்ல மாட்டன். நாங்க யாழ்ப்பாணத்தில இருந்து இடம் பெயர்ந்தனாங்கள் செம்மணியில நிரைய நின்டு தான் வந்தனாங்க அதுக்கு பிறகு ஜெயசிக்குறுவிலயும் ஓமந்தை தொடக்கம் மாங்குளம் வரைக்கும் வந்து நிண்டவங்கள் தானே அதுக்கும் நாங்கள் இடம் பெயர்ந்தனாங்கள்.

இடம் பெயருறது என்றால் எங்களுக்கு கற்கண்டு சாப்பிடுற மாதிரி என்று சொல்லத்தான் விருப்பம் ஆனால் என் கண்ணில வழியில நீரை மறைந்து வெளிநாட்டில இருக்கிற உங்களுக்கு நடக்கிறதை மறைக்க நான் விரும்பல்ல. உங்களுக்கு வாற செய்திகள் எல்லாம் பொய் என்று சொல்ல சொல்லி என்ற மனசு சொல்லுது ஆனால் உங்கள நம்பி இருக்கிற ஒரு உயிர் என்றதால எழுதுறன்.

கால்கள் தள்ளாடுது, கண்கள் என்னை கேக்காமலே தூங்குது, ஆரச்சோர எங்களால நடக்க முடியல்ல மன்னகன்டல்ல இருந்து கச்சிலை மடுவுக்கும் கச்சிலை மடுவில இருந்து புதுக்குடியிருப்புக்கும் இப்ப இங்க இருந்தும் கிளம்புறம். வாழ்வு வெறுத்துப் போச்சு செத்தாலும் பறவாயில்லை என்று என்ர வாய் சொல்லுது ஆனா சாகிறதுக்கு பயத்தில தான் ஓடுறம். பேத்த பிள்ளையள் நாளைக்கு ஒரு நிம்மதியான தேசத்தில வாழும் என்று நினைச்சுக்கொண்டு தான் கஸ்ரத்தை தாங்கிறம்.

விதைத்த வயலில ஆமியின்ர சப்பாத்து காலடிகள், காய்த்த தென்னம்பிள்ளை கூட ஆமிக்கு பலமாய் காவலரன் அமைக்க உதவுது விதைத்து விட்டு, வளர்த்திட்டு நாங்க மட்டும் உண்ண உணவில்ல படுக்க பாயில்ல. மழைக்கு தறப்பால் அது தான் உந்த கூரை விரிப்பு விரிச்சானாங்கள்ஆனால் கீழா வெள்ளம் வந்திட்டு. என்ன செய்ய நுளம்பும் கூடவே வருது மலேரியா காச்சலும் கிட்டடியில கொலராவும் வரும் போல கிடக்கு. ஆஸ்பத்திரிருக்கு போய் வரிசை கட்டி நிக்க வேணும், ஆனா அங்கயும் ஆமியின்ர ஷெல்லடியில காயப்பட்டாக்களுக்கு கூட மருந்து கூடுக்க ஆக்கள் காணாது. இதுக்குள்ள வருத்தத்துக்கு யாரிட்ட மருந்துக்கு போறது.

நேற்றைக்கும் பக்கத்து வீட்டு பார்வதி அம்மா வீட்டுக்கு பக்கத்தில ஷெல் விழுந்தது. புhவம் பங்கருக்க ஓடிப்போய் குதிச்ச சின்னப்பிள்ளை தண்ணியில மூழ்கி இறந்து போச்சு. காலன் எங்களுக்கு எல்லாப்பக்கத்தாலையும் வாறான். பதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில தான் மாமாவின்ர காயப்பட்ட மகன வைச்சிருக்கினம் பார்க்கிறதுக்கு போனான் அங்க பாம்பு கடிச்ச ஒராலை கொண்டு வந்தவை பாவம் சனங்கள், அந்த பாம்பு கடிச்சவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலையே இறந்திட்டார். பாம்பு கடிச்சு ஒரு 5 மணித்தியாலத்துக்கு பிறகு தான் அவையளால ஆஸ்பத்திரிருக்கு வந்து சேர முடிஞ்சுது. வுன்னியில ரோட்டுகள் எப்பிடி என்று தெரியும் தானே அதோட வாகனங்கள் பிடிக்கிறதும் கஸ்ரம்.

பாம்;பு பூச்சி இருந்த இடத்தில நாங்கள் போய் இருந்தால் அதுகளுக்கு கோவம் வந்திட்டு போல அதுகள் தமிழர் போல இல்லை தானே எத்தனை அடி அடிச்சாலும் அடிவாங்கிறவன் மட்டும் தான் அழுறான் மற்றவன் தனக்கு அடிவிழல்ல என்று சிரிக்கிறான். அது போல பாம்பு பூச்சியல் இருக்க மாட்டுதுகள் போல!

ஐயோ மேலால வாறான் போல கிடக்கு இப்ப எங்க போடப்போறானோ தெரியல்ல. இப்ப பங்கருக்க ஓடித்தான் என்ன பிரயோசனம் அவன் போடுற குண்டு மேலேயே வெடிச்சு பங்கருக்குள்ளையும் பீஸ் வந்து விழும். ஆதால தான் நான் நடக்கிறது நடக்கட்டும் என்று இதுக்கையே இருக்கிறன்.

நாங்கள் செத்தாலும் எங்களை நாதியற்றவர்களாக நீங்கள் விட மாட்டிள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. நீங்கள் கொடுக்கிற தோள் தான் எங்களை சுமக்கும் அது மட்டும் தான் உண்மை. ஊலகத்த நம்பி நாலு லட்சம் மக்கள் இநத குறுகிய நிலத்துக்குள்ள இருக்கல்ல.

உங்கள வெளிநாட்டில இருக்கிற உங்களை நம்பி, உங்கட உதவியை நம்பி தான் இருக்கிறம் நீங்கள் சொல்லாமல் செய்த உதவிக்கு நாங்கள் உறுதியோட எங்களுக்கான நாட்டைமீட்கிற வரைக்கும் எங்கடை தலைமையோட ஒன்றாய் இருப்பம் நீங்கள் எல்லாரும் ஒன்றை நம்புங்கோ தமிழினம் மீண்டும் சிரிக்கும்! அப்ப தமிழீழம் விடிஞ்சிருக்கும்.

ஈழத்திலிருந்து ஓர் தமிழன்

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.