Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Friday, April 24, 2009

கிழக்கிலிருந்து அதிரடிப்படையினர் வன்னிக்கு!! ஊடுருவித் தாக்குதலில் கருணாகுழு சிறுவர்கள்!!


படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் உள்ள விசேட அதிரடிப்படையினரை வன்னிக் களமுனை களுக்கு கொண்டு செல்தற்கும். பதிலுக்கு கருணாகுழுவினரை வைத்து ஊடுருவித் தாக்குதல்களை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மட்டக்களப்பு, வெல்லாவெளி,குருமண்காடு, அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, பழுகாமம், முனைக்காடு, போரதீவு, பங்குடாவெளி, மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 1,500 விசேட அதிரடிப்படையினரை வன்னிக் களமுனைகளுக்கு கொண்டுசெல்வதற்கும், இப்பிரதேசங்களிலுள்ள விசேட அதிரடிப்படை முகாம்களில் தலா 3 தொடக்கம் 5 வரையான கருணா குழு உறுப்பினர்களை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து செயலாற்று வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும். இதற்கான முழு ஒத்துழைப்பையும் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்க கருணா உறுதியளித் துள்ளதாகவும் விசேட அதிரடிப்படையிரை மேற்கோள்காட்டிய முக்கிய தகவலொன்று தெரிவிக்கின்றது.மேலும் இப்பிரதேசங்களிலிருந்து இன்னும் சில தினங்களில் மிகுந்த அவதானத்துடனும் பலத்த பாதுகாப்புக்களுடனும் 1,500 விசேட அதிரடிப் படையினரும் கொண்டு செல்லப்படவிருப்பதாகவும். வன்னிக் களமுனையில் படையினரின் இழப்பை ஈடுசெய்யுமுகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.விசேட அதிரடிப்படையினர் கிழக்குக் காட்டுப் பிரதேசங்களுக்குள் ஆழஊடுருவி மறைந்திருக்கும் புலிகள்மீது தாக்குதல்களை நடத்தினால் தமக்கு அதிகளவில் இழப்புக்களை சந்திக்க நேரிடும் என்பதால் இ;வாறான தாக்குதல்களை தமிழர்களான கருணாகுழு உறுப்பினர்களை வைத்து காட்டுப்பிரதேசங்களுக்குள் ஊடுருவவிட்டு புலிகளுடைய நடவடிக்கைகளை அவதானித்து அவர்களுடைய விநியோக வழிகளை இனங்கண்டு அவர்களை சுற்றிவளைத்து தாக்குதல்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என்பதால் கருணாகுழுவைச்சேர்ந்த சிறுவர்கள் பலரை ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தவும் மீட்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தப்படுவதற்கும் முக்கியமான முடிவுகள் விசேட அதிரடிப்படை உயர்மட்ட முக்கியஸ்தர்களால் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு லகுகலை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட இவ்வாறான ஆழஊடுருவித் தாக்குத லொன்றில் ஒரு அதிகாரி உட்பட 11 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே இத்தகைய முடிவு உயர்மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.