Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Thursday, April 23, 2009

கொழும்பு தேசியவைத்தியசாலையில் அதிகளவில் புலனாய்வுப்பிரிவினர்!!


கொழும்பு தேசியவைத்தியசாலையில் அதிகளவில் புலனாய்வுப்பிரிவினர்!! திடுக்கிடும் தகவல்!!
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்தமாதம் 26 ஆம் திகதி சத்திரசிகிச்சைக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயிருந்தார்.கடந்த 11 ஆம்திகதி வைத்தியசாலை ஊழியரான புஞ்சிபண்டார என்பவரால் இவர்வெளியே அழைத்துச் செல்லப்பட்டபொழுது வைத்தியசாலை வாசலில் வெள்ளை வானில் நின்றவர்களால் இவர் கடத்திச்செல்லப்பட்டதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. அதன்பின் 11 நாட்களுக்குப் பின்னர் கண்கள் கட்டப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ஜா-எலவில் மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி நெல்லியடியைச் சேர்ந்த 28 வயதான முருகதாஸ் பிரசாத் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போய் அடி காயங்களுடன் மீட்கப்பட்டவராவார்.எனினும் இது தொடர்பாக நாம் ஆராய்ந்தபொழுது சில திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டபொழுதே புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பின் தொடர்ந்து அவதானித்து வந்ததாகவும். சத்திரசிகிச்சை முடியம்வரை இவர் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வந்ததாகவும். பின்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்காக வேலைசெய்யும் வைத்தியசாலை ஊழியரான புஞ்சிபண்டார என்பவரால் இவர் அழைத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலை வாசலில் வெள் ளைவானில் இருந்தவர்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை யிலிருந்து நம்பகமான தகவலொன்று எமக்குக் கிடைத்துள்ளது.கொழும்பு தேசியவைத்தியசாலையில் இராணுவப் புலனாய்வுப்பிரிவினருக் காக வேலைசெய்வதற்காக தமிழ்தெரிந்த சிங்களவர்கள் சிலரை இராணுவ புலனாய்வுப்பிரிவு முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரோஹித என்பவர் நியமித் துள்ளார். இவர்கள் இவ்வைத்தியசாலையில் பல்வேறு பிரிவுகளிலும் வேலை செய்து வருகின்றனர். பிரேத அறை, கழிவகற்றும் தொழிலாளர்களாக, நோயா ளர்களை பராமரிப்பவர்களாக. வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் என இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கொடுப்பதற்காக சிங்களவர்க ளும் தமிழர்கள் சிலரும் பெருந்தொகையான பணத்தைப் பெற்று வேலை செய்து வருவதாகவும் அத்தகவல் எச்சரித்துள்ளது. அதைவிட வைத்தியசா லைக்கு வெளியில் ஓட்டோ ஓடுபவர்களும் புலனாய்வுப் பிரிவினருக்கு தாம் ஏற்றிச் செல்லும் தமிழர்கள்பற்றிய தகவல்களைக் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றது. இத்தகவல்களை எமக்கு வழங்கியவரின் பாதுகாப்புக் கருதி அவர் பற்றிய விபரங்களை நாம் இங்கு வெளியிடவில்லை.எனவே எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைகளுக்காக செல்லும் தமிழ்மக்கள் மிகுந் த அவதானத்துடன் நடக்கும்படியும், அநாவசியமாக எவருடனும் உரையாட வேண்டாமென்றும். தேவைகள் முடிந்தவுடன் உடனடியாக வெளியேறிவிடு வதுடன் எவராவது உங்களை பின்தொடர்ந்து வருகின்றார்களா என்பதையும் அவதானிக்கும்படியும் எமது செய்திச்சேவையின் மூலமாக உங்களைக் கேட் டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.