சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன? (அல்லது) இனப்பற்று என்றால் என்ன? என்று தெரியாத மனிதர்களுக்கு இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்-கின் தம்பி ரன்பீர் சிங்-கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன் யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன்இ விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.ஆனால் ரன்பீர் சிங்கோ "இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால் நமக்குள் எந்த உறவும் இருக்காது"என்று சொல்ல யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் அகிம்சையை போதிக்கும் காங்கிரஸ்-காரனுக்கும், வட இந்திய ஊடகங்களுக்கும் புரியவில்லை. புரியாததுபோல் நடிக்கிறார்கள்...
அகிம்சையை பற்றி பேசும் எல்லோரும் காந்தி-யைவிட அகிம்சையில் உயர்ந்தவர்களா?...அப்படிபட்ட காந்தியே என்ன சொல்லியருக்கிறார்...
“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன்படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரிபோகும்போது நிச்சயமாக என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
இதனால்தான் பல கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளான தமிழர்கள் இன்று ஆயுதபோராட்டத்திற்கு தள்ளப்பட்டு போராடிகொண்டிருக்கிறார்கள்.
Tuesday, April 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment