நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா
நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா] (2)
அடர்ந் காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா (2)
உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா (2)
[எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய்
தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய்] (2)
கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் (2)
நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய்
[தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய்
உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய்] (2)
நம்பி நின்ற எங்களிற்கு நஞ்சை ஊட்டினாய் (2)
புலிக் காளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய் கம்பி நீட்டுவாய்
[வீதி எங்கும் சாவினோடு மக்கள் ஓடுறார்
புலி வீரர் நின்று எதிரியோடு யுத்தமாடுறார்] (2)
நீதியற்ற பகைவனோடு கூட்டம் போடுறாய் (2)
அவன் நீட்டுகின்ற பதவியேற்று ஆட்டமாடுறாய் ஆட்டமாடுறாய்
[பெற்றதாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி] (2)
அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் (2)
எம் அண்ணன் வந்து உங்களிற்குத் தீர்ப்புக் கூறுவார் தீர்ப்புக் கூறுவார்
Tuesday, November 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment