குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா
இது வேங்கைகள் வாழும் நாடு - அவர்
வீரத்தையே தினம் பாடு
குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா
அஞ்சல் அகற்றிட நஞ்சினை ஏந்தி
வெஞ்சமர் ஆடிடும் பிள்ளை - அவர்
வீரத்துக்கே இணையில்லை - இதை
நெஞ்சில் நினைந்து அஞ்சல் அகற்றி
கொஞ்சும் குரல்தனில் பாடக்கா
குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா
இந்தியம் வந்திங்கு வஞ்சனை செய்தது
எங்கள் புலி பயந்தாரா - கொண்ட
இலட்சியத்தை மறந்தாரா - அவர்
சத்தியம் காக்க யுத்தம் புரிந்த
சங்கதியைத் தினம் பாடக்கா
குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா
காலைப் பொழுதினில் சோலை நடுவினில்
கானம் இசைத்திடும் குயிலக்கா - சுப
இராகம் இனிக்கும் உன் குரலக்கா
நாளை நமக்கொரு ஈழம் மலர்ந்திடும்
நாலு திசை எட்டப் பாடக்கா
குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா.
Tuesday, November 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment