Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Wednesday, April 29, 2009

அகதி முகம்களில் மனித உரிமை மீறல்கள் ? : ஹோல்ம்ஸ்


ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் தமது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது “ஏற்றுக்கொள்ளப்பட” முடியாததென்று கண்டனம் தெரிவித்துள்ள ஜோன்ல் ஹோல்ம்ஸ், பலதடவை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் நடக்கும் பகுதியில் சிக்குண்டுள்ள 50 ஆயிரம் சிவிலியன்களை விடுவிப்பதற்கான முயற்சிகளைத் தாம் மேற்கொள்வதற்குப் போர் நிறுத்தம் அவசியம் என்றும் அதற்கு இலங்கை அரசு இணங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
வெளியேறும் பொதுமக்கள் அரசால் நிர்வகிக்கப்படும் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளதாகவும், இம் முகாம்களில் சிறீ லங்கா இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளிவருவதாகவும், உதவி அமைப்புக்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டால் மட்டுமே அச்செய்திகள் உண்மையானவையா அல்லது உண்மைக்குப் புறம்பானவையா எனத் தெரிந்துகொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
இல்னக்கைக்கான தனது இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய கோல்ம்ஸ் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலைக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் மனிதப்பேரவலம் : பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்


இலங்கையில் நடைபெறுவது மனிதப்பேரவலம் என இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் சனல் 4 தொலைக்காட்சியின் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
போர் நடக்கும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களும், அதற்கு வெளியில் முகாம்களிலுள்ள மக்களும் மனிதப்பேரவலத்திற்குள் சிக்குண்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கான அனுமதி மட்டுப் படுத்தப்பட்டிருக்கின்றன, மனிதாபிமான தன்னார்வ அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என மேலும் தெரிவித்த அவர், உதவி அமைப்புக்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
உதவி அமைப்புக்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என்று கோரும் நோக்கிலேயே தாம் இலங்கை வந்திருப்பதாகவும் அதற்கான அழுத்தங்களை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்

Tuesday, April 28, 2009

இவருக்கு புரிந்தது..ஏன் மற்றவர்களுக்கு புரியவில்லை? அல்லது புரியாததுபோல் நடிக்கிறார்களா?

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன? (அல்லது) இனப்பற்று என்றால் என்ன? என்று தெரியாத மனிதர்களுக்கு இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்-கின் தம்பி ரன்பீர் சிங்-கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன் யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன்இ விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.ஆனால் ரன்பீர் சிங்கோ "இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால் நமக்குள் எந்த உறவும் இருக்காது"என்று சொல்ல யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் அகிம்சையை போதிக்கும் காங்கிரஸ்-காரனுக்கும், வட இந்திய ஊடகங்களுக்கும் புரியவில்லை. புரியாததுபோல் நடிக்கிறார்கள்...

அகிம்சையை பற்றி பேசும் எல்லோரும் காந்தி-யைவிட அகிம்சையில் உயர்ந்தவர்களா?...அப்படிபட்ட காந்தியே என்ன சொல்லியருக்கிறார்...

ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன்படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரிபோகும்போது நிச்சயமாக என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது

இதனால்தான் பல கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளான தமிழர்கள் இன்று ஆயுதபோராட்டத்திற்கு தள்ளப்பட்டு போராடிகொண்டிருக்கிறார்கள்.

Sunday, April 26, 2009

தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது


தொடர்ந்து போரிடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது என்று இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'த வீக்' ஆங்கில வார இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி, புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர், கொடுங்கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பயங்கரவாதி எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம் அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும் அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.

பிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சாவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. 17 வயதிலிருந்தே அவர் சாவுடன் உறவாடி வருகிறார். அவர் சிறிதும் தளர்ச்சி அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில் இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.

எனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.

இந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச் செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ என்பது எனக்கு ஐயம்தான். அவர் தனது மக்களின் விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில் அவர் மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக இருக்கிறார்.

வெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை இழப்பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள், தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக இருப்பார்.

இந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள் இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.

பிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச் சூழ்நிலைமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர் ஆக்கிக் கொண்டார்.

அமெரிக்கா மீது செப்ரெம்பர் 11 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜோர்ஜ் புஸ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது.

உலகில் அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப் படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் குறிக்கோள்களை அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப் பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்தான்.

அண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட பயங்கரவாதிகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.

இது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல, தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.

ஓராண்டுக்கும் மேலாக, அப்பாவிகளான தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய, அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.

மோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியே, தாக்குதல் நடத்தும் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.

வெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில் எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை, ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால் இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள், குருடாகிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.

இந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியுமா? ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்க
மக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா? சிறிலங்கா படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல்வதில் தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ் மக்களையும் அவர்களது தாயகத்தையும் சிறிலங்கா அரசு அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.

ஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும். விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

ஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது, குறிக்கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும் உணர்ச்சிமயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள் போர்ப்பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து, விடுதலைப் புலி போராளிகள் போரிடுவதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள். போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை 'கொல்லப்பட்டிருக்கிறார்' அல்லது 'கொல்லப்படும் நிலையை நெருங்கியிருக்கிறார்.' அவரது பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும் எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.

"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறிலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து கடைசித் துண்டு நிலத்தையும் சிறிலங்கா படை கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப் பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும் கொரில்லா போர்முறைக்குத் திரும்புவார்கள். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது வேறு என்பதையும், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு படைகள் உணர்ந்திருக்கின்றன.

பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார் அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.

54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது. ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.

நிலைமைகள் மாறும். அமெரிக்கா மாறியிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டது. சோசலிசம் பின்வாசல் வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித்துப் போய்விட்டன. தலைப்புச் செய்திகளில் வளவாழ்வுச் செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள் இடம்பிடித்து வருகின்றன.

புதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள் பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன் உறவாடுவதற்காக காத்திருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்.

இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்:


இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' வுக்கு எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான 'புக்கர் பரிசு' பெற்ற 'த கொட் ஓஃப் ஸ்மோல் திங்ஸ்' எனும் புதினத்தை எழுதியவர் அருந்ததி ரோய்.

இலக்கியப் பணிகளுக்கு இடையே சமூகத்தின் தீவிரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கு எதிராக களமிறங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் கட்டுரையை இங்கு தமிழில் தருகிறோம்:

இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விடயமாகும்.

இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பரப்புரையை சிறிலங்கா அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது.

தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் சிறிலங்கா அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்கும் இடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது.

சண்டை நடைபெறும் பகுதியில் 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறு
கூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.

ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளைத் 'துடைத்து எறிய வேண்டும்' என்பதை சிறிலங்கா அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், 'பயங்கரவாதிகளும்' வீழ்ந்து கொண்டிருப்பது, சிறிலங்கா அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது.

ஏற்கெனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்புகளாக உள்ளன.

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தண்டனைக் உட்படாமல் சிறிலங்கா அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடியுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள்
ஒதுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திரவதை என நீண்ட வரலாறு உண்டு.

வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.

ஏன் இந்த மௌனம் இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயற்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.

சமுதாயத்தை 'அச்சத்தில் உறைய வைக்கிற' கொலைக் கும்பல்கள், 'வெள்ளை வேன் கடத்தல்கள்' தொடர்பாக எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உட்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.

பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் சிறிலங்கா அரசு பயன்படுத்துவதாக அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு பொருள் உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? சிறிலங்கா நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளைவிக்க என்ன செய்கின்றன?

இலங்கையில் நடைபெறும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் அதிகமானோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.

இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மௌனம்? இந்தச் சிக்கலில் இங்கே 'வெள்ளை வான் கடத்தல்கள்' எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த மௌனம் மன்னிக்க முடியாதது.

முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயற்படும் இந்திய அரசின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது இந்த மௌனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உட்பட, நம்மில் பலரும், இது தொடர்பாக முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.

படுகொலைகள் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கி உள்ளனர். ஓர் இனப் படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப்பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எழுத்தாளர் அருந்ததி ரோய்

Friday, April 24, 2009

கிழக்கிலிருந்து அதிரடிப்படையினர் வன்னிக்கு!! ஊடுருவித் தாக்குதலில் கருணாகுழு சிறுவர்கள்!!


படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் உள்ள விசேட அதிரடிப்படையினரை வன்னிக் களமுனை களுக்கு கொண்டு செல்தற்கும். பதிலுக்கு கருணாகுழுவினரை வைத்து ஊடுருவித் தாக்குதல்களை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மட்டக்களப்பு, வெல்லாவெளி,குருமண்காடு, அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, பழுகாமம், முனைக்காடு, போரதீவு, பங்குடாவெளி, மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 1,500 விசேட அதிரடிப்படையினரை வன்னிக் களமுனைகளுக்கு கொண்டுசெல்வதற்கும், இப்பிரதேசங்களிலுள்ள விசேட அதிரடிப்படை முகாம்களில் தலா 3 தொடக்கம் 5 வரையான கருணா குழு உறுப்பினர்களை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து செயலாற்று வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும். இதற்கான முழு ஒத்துழைப்பையும் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்க கருணா உறுதியளித் துள்ளதாகவும் விசேட அதிரடிப்படையிரை மேற்கோள்காட்டிய முக்கிய தகவலொன்று தெரிவிக்கின்றது.மேலும் இப்பிரதேசங்களிலிருந்து இன்னும் சில தினங்களில் மிகுந்த அவதானத்துடனும் பலத்த பாதுகாப்புக்களுடனும் 1,500 விசேட அதிரடிப் படையினரும் கொண்டு செல்லப்படவிருப்பதாகவும். வன்னிக் களமுனையில் படையினரின் இழப்பை ஈடுசெய்யுமுகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.விசேட அதிரடிப்படையினர் கிழக்குக் காட்டுப் பிரதேசங்களுக்குள் ஆழஊடுருவி மறைந்திருக்கும் புலிகள்மீது தாக்குதல்களை நடத்தினால் தமக்கு அதிகளவில் இழப்புக்களை சந்திக்க நேரிடும் என்பதால் இ;வாறான தாக்குதல்களை தமிழர்களான கருணாகுழு உறுப்பினர்களை வைத்து காட்டுப்பிரதேசங்களுக்குள் ஊடுருவவிட்டு புலிகளுடைய நடவடிக்கைகளை அவதானித்து அவர்களுடைய விநியோக வழிகளை இனங்கண்டு அவர்களை சுற்றிவளைத்து தாக்குதல்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என்பதால் கருணாகுழுவைச்சேர்ந்த சிறுவர்கள் பலரை ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தவும் மீட்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தப்படுவதற்கும் முக்கியமான முடிவுகள் விசேட அதிரடிப்படை உயர்மட்ட முக்கியஸ்தர்களால் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு லகுகலை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட இவ்வாறான ஆழஊடுருவித் தாக்குத லொன்றில் ஒரு அதிகாரி உட்பட 11 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே இத்தகைய முடிவு உயர்மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

Thursday, April 23, 2009

கொழும்பு தேசியவைத்தியசாலையில் அதிகளவில் புலனாய்வுப்பிரிவினர்!!


கொழும்பு தேசியவைத்தியசாலையில் அதிகளவில் புலனாய்வுப்பிரிவினர்!! திடுக்கிடும் தகவல்!!
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்தமாதம் 26 ஆம் திகதி சத்திரசிகிச்சைக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயிருந்தார்.கடந்த 11 ஆம்திகதி வைத்தியசாலை ஊழியரான புஞ்சிபண்டார என்பவரால் இவர்வெளியே அழைத்துச் செல்லப்பட்டபொழுது வைத்தியசாலை வாசலில் வெள்ளை வானில் நின்றவர்களால் இவர் கடத்திச்செல்லப்பட்டதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. அதன்பின் 11 நாட்களுக்குப் பின்னர் கண்கள் கட்டப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ஜா-எலவில் மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி நெல்லியடியைச் சேர்ந்த 28 வயதான முருகதாஸ் பிரசாத் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போய் அடி காயங்களுடன் மீட்கப்பட்டவராவார்.எனினும் இது தொடர்பாக நாம் ஆராய்ந்தபொழுது சில திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டபொழுதே புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பின் தொடர்ந்து அவதானித்து வந்ததாகவும். சத்திரசிகிச்சை முடியம்வரை இவர் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வந்ததாகவும். பின்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்காக வேலைசெய்யும் வைத்தியசாலை ஊழியரான புஞ்சிபண்டார என்பவரால் இவர் அழைத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலை வாசலில் வெள் ளைவானில் இருந்தவர்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை யிலிருந்து நம்பகமான தகவலொன்று எமக்குக் கிடைத்துள்ளது.கொழும்பு தேசியவைத்தியசாலையில் இராணுவப் புலனாய்வுப்பிரிவினருக் காக வேலைசெய்வதற்காக தமிழ்தெரிந்த சிங்களவர்கள் சிலரை இராணுவ புலனாய்வுப்பிரிவு முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரோஹித என்பவர் நியமித் துள்ளார். இவர்கள் இவ்வைத்தியசாலையில் பல்வேறு பிரிவுகளிலும் வேலை செய்து வருகின்றனர். பிரேத அறை, கழிவகற்றும் தொழிலாளர்களாக, நோயா ளர்களை பராமரிப்பவர்களாக. வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் என இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கொடுப்பதற்காக சிங்களவர்க ளும் தமிழர்கள் சிலரும் பெருந்தொகையான பணத்தைப் பெற்று வேலை செய்து வருவதாகவும் அத்தகவல் எச்சரித்துள்ளது. அதைவிட வைத்தியசா லைக்கு வெளியில் ஓட்டோ ஓடுபவர்களும் புலனாய்வுப் பிரிவினருக்கு தாம் ஏற்றிச் செல்லும் தமிழர்கள்பற்றிய தகவல்களைக் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றது. இத்தகவல்களை எமக்கு வழங்கியவரின் பாதுகாப்புக் கருதி அவர் பற்றிய விபரங்களை நாம் இங்கு வெளியிடவில்லை.எனவே எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைகளுக்காக செல்லும் தமிழ்மக்கள் மிகுந் த அவதானத்துடன் நடக்கும்படியும், அநாவசியமாக எவருடனும் உரையாட வேண்டாமென்றும். தேவைகள் முடிந்தவுடன் உடனடியாக வெளியேறிவிடு வதுடன் எவராவது உங்களை பின்தொடர்ந்து வருகின்றார்களா என்பதையும் அவதானிக்கும்படியும் எமது செய்திச்சேவையின் மூலமாக உங்களைக் கேட் டுக்கொள்கின்றோம்.

Tuesday, April 21, 2009

ஒன்றை விளங்கோணும் மக்களே!!!!


ஒன்றை விளங்கோணும் மக்களே, நீங்க இதோட ஒரு முடிவு காணாவிட்டால் நாளை 5000 , 10000 பேரின் சாவுக்கு நாமும் பாத்திரவாளிகள்.







இவ் ஆதாரங்களை உயிர் ஆபத்திலும் எங்கள் தமிழ் ஊடகவியளர்கள் திரட்டி வன்னியில் இருந்து சிரமப்பட்டு இணையத்தின் ஊடாக அனுப்புகின்றனர், ஆனால் இவற்றை வெளி நாட்டு போராட்ட ஏற்பாட்டாளர்கள் சரிவர பயன்படுத்துவதில்லை என்பதுதான் கவலையளிக்கிறது, இதை தயவு செய்து கவனிக்கவும், இதுவரை செய்த தவறுகளால் தான் இந்த பேரவலம், மீண்டும் மீண்டும் தவறுகளை செய்யவேண்டாம், இவற்றை அனைத்து ஊடகங்களுக்கு அனுப்புங்கள்

இதுவரை வெளியான அனைத்து விடியோக்களையும், வெளி நாட்டு செய்தி ஆதாரங்களையும் இருவெட்டில் பதிந்து பிரான்ஸ் ஏற்பாட்டாளர்களுக்கு கொடுத்தேன், எந்த பயனுமில்லை அவர்களின் காருக்குள் தான் அந்த சிடிக்கள் இருக்கின்றன, இந்த விடியோக்கள் எவ்வளவு சிரமத்தின் மத்தியில் எடுக்கப்படுகின்றன என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

தமிழர்களே!!!

தமிழர்களே,இன்றைய வியட்நாம் நமக்கு ஆதரவாக இல்லை. நமது எதிரிகளுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனாலும் அந்த நாட்டை கட்டியமைத்த "ஹொசிமின்" போராட்டவாழ்க்கை இப்போது நாம் கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கும். எப்படி ஹொசிமின் அமெரிக்காவை விரட்டி அடித்தரோ அதேபோல் நமது "ஈழ தேசிய ராணுவமும்" சிங்கள அரக்க படையை விரட்டிஅடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை...நம்பிக்கையோடு இருப்போம்..


ஹோசிமின்: சிங்கங்களுக்கு பாடம் புகட்டிய கானக நரி
சரித்திரத்திலே பல முறை இறந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்தான். இவர் இறந்து விட்டார் என அறிவித்துவிட்டு எதிரிகள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுவார்கள்.

ஆனால் பீனிக்ஸ் பறவைகள் போல சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு நாட்டிலிருந்து இவர் வெளிப்படுவார். ஒன்று இரண்டு முறை அல்ல பலமுறை இப்படி அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார். எதிரிகளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவின ஹோசிமின் புத்தபிட்சு பத்திரிகையாளர்கள் என் பல ஆதாரங்களை எடுத்திருக்கிறார்.

இன்றைய கணக்குப்படி அமெரிக்கா நடாத்திய முதலிலும் கடைசியுமான நீண்ட போர் வியட்நாம் போர்தான். அது போல அமெரிக்கா வேறு ஒரு நாட்டிடம் போரில் தோற்றிருக்கிறது என்றால் அது வியட்நாமிடம் தான். வியாட்நாமின் இந்த வீர வரலாற்றுக்குப் பின்னே இருப்பவர் ஹோசிமின்.

1890ம் ஆண்டு வியட்நாமில் தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்த இவர். அப்பா, அம்மா வைத்த பெயர் சிங்சுங். ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு இருட்டிலே இருந்த நாட்டுக்கு ஒளியை கொண்டு வந்தவர் என்பதால் அந்த நாட்டு மக்கள் ‘ஒளி தந்தவர்’ என்ற அர்த்தத்தில் இவரை நேசத்துடன் ‘ஹோசிமின்' என்று போற்றினர். பிறகு இதுவே இவரின் பெயராக மாறியது.

ஹோசிமின் சிறுவனாக இருந்த போது வியட்நாம் பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்தது. சும்மா ஒப்புக்காக வியட்நாமை சேர்ந்த ஒருவரை தனது கைப்பாவையாக ஆட்சி பீடத்தில் உட்கார வைத்துவிட்டு அவரின் நிழலின் நின்று பிரான்ஸ் ஆட்சி செய்து வந்தது. அப்போது இந்த டம்மி அரசாங்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரில்லா படையினருக்கு தகவல்கொண்டு செல்லும் தூதராக ஹோசிமின் வாழ்க்கையை தொடங்கினார்.

உயிரை பணயமாக வைத்து இந்த பணியை செய்த சிறுவன் ஹோசிமினுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. சிறுவன் ஹோசிமின் இளைஞனாக மாறியதும் தன் நாட்டு மக்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிவது என்று உறுதி பூண்டார்.

பிரான்ஸின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். இதனால் பிரான்ஸின் சக்தி மிகுந்த ஆயுதங்களையும் அதிகாரத்தையும் எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியவில்லை. பிரான்ஸை அப்படி ஜெயிப்பது என்று கண்டறிய பிரான்ஸ் நாட்டிற்கு இவர் போனார்.

பாரீஸில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்துக் கொண்டே பிரான்ஸ் மக்கள் எப்படி உலகத்தில் முதல் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியை நடத்தினார்கள்; சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற கோஷம் அந்நாட்டு மக்களை எப்படி ஜெயிக்க வைத்தது என்று பொறுமையாக ஆராய்ந்தார். இவர் கடைசியாக தனது பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்தது.

1940ம் ஆண்டு வியட்நாம் நாட்டை பிரான்ஸிடம் இருந்து ஜப்பான் கைப்பற்றியது. அப்போது பிரான்ஸ் மீது எரிச்சலில் இருந்த வியட்நாம் மக்கள் ஜப்பானிய சிப்பாய்களை தங்களை மீட்க வந்த ரட்சகர்கள் என்று போற்றினார்கள். ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அப்போது வியட்நாம் திரும்பிய ஹோசிமின் சொன்னார்.

‘முக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது. பிரான்சாக இருந்தாலும் சரி ஜப்பானாக இருந்தாலும் சரி இவர்களில் யார் நம்மை ஆண்டாளும் நமக்குப் பெயர் அடிமைகள் தான். ஆகையால் இந்த இரண்டு பேரையுமே விரட்டியடித்தால் தான் நம்மால் சுதந்திர வியட்நாமை உருவாக்க முடியும் என்று அவர் முழங்கினார்.

ஹோசிமின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்ட ஜப்பான் சும்மா இருக்குமா? ஹோசிமினைக் கைது செய்ய அந்த நாடு முழுக்க வலை விரித்தது. வியாட்நாமின் அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்த ஹோசிமின் அப்போது பெரும் படையை திரட்டிக் கொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் கலகலத்துப் போன சமயம் பிரான்ஸ் நாட்டின் இராணுவத்தை முந்திக் கொண்டு ஹோசிமின் படை வியட்நாமின் ஆட்சியை கைப்பற்றியது.
ஹோசிமின் சிறு வயதுக் கனவு நனவானது. வியட்நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஹோமிசின் உலகத்திற்கு அறிவித்தார். சூட்டோடு சூடாக தங்கள் நாட்டில் தேர்தலை நடத்தினார். இதில் ஹோசிமினின் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வாகை சூடியது. மக்கள் ஹோசிமினை தனது தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள்.

மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து தாமதமாக விழித்துக் கொண்ட பிராஞ்சு படைகளை ஹோசிமின் படைகளோடு மோத முதல் வியட்நாம் யுத்தம் ஆரம்பமானது. அப்போது பிரான்ஸிடம் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், டாங்கிகள் என்று நவீன ஆயுதங்கள் அத்தனையும் இருந்தன. பிரான்ஸின் படைகளோடு ஒப்பிடும்போது ஹோசிமின் கெரில்லா படையோ மிகவும் பலவீனமானது.
அப்போது ஹோசிமின் பிரான்சை பார்த்து இப்படி எச்சரித்தார். ‘உங்களின் படை வீரர்களின் ஒருவரை நாங்கள் கொன்றால் உங்களால் எங்கள் படை வீரர்களில் பத்து பேரைக் கொல்ல முடியும். ஆனால் இந்த போரின் இறுதியில் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போய்வீர்கள் நாங்கள் ஜெயிப்போம்’ ஹோசிமினின் இந்த வார்த்தைகளை வெறும் வாய்ச்சடவால் என்று ஒதுக்கிவிட்டு பிரான்ஸ் தனது படைகளை முடுக்கிவிட்டது.

வியட்நாமின் அடர்ந்த காடுகளில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்ட ஹோசிமினின் கெரில்லாப் படை ஐம்பத்தைந்து நாட்கள் கடுமையான போர் புரிந்தன. இறுதியில் பிரெஞ்சு இராணுவ தளத்தை அது தகர்க்க ஹோசிமின் சொல்லானது நிஜமானது. பிரான்ஸ் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தது.
என்றாலும் ஹோசிமினால் இந்தப் போரில் வடக்கு வியட்நாமை மட்டுமே தன் வசம் வைத்துக் கொள்ள முடிந்தது. வியட்நாமின் தெற்குப் பகுதியோ பிரான்ஸின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. ஹோசிமின் அசரவில்லை. தனது நாட்டை வடக்கு - தெற்கு என்று பிரிக்கும் எல்லைக் கோட்டை அழித்து ஒருமித்த வியட்நாமை உருவாக்கியே தீருவேன் என்று சபதம் செய்தார்.

வடக்கு வியட்நாமிலிருந்து ஆதிக்க சக்தியான பிரான்ஸை ஹோசிமினின் கெரில்லாப் படைகள் விரட்டி அடித்து விட்டு வெற்றிக் களிப்பில் இருந்த சமயம்... தெற்கு வியட்நாமின் பதுங்கியிருந்த பிரான்ஸ் ஒரு சதித் திட்டம் தீட்டியது.

ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமானவர். அவரை வளர விடுவது கைகட்டி வாய்மூடி கம்யூனிஸ்ட்களின் ஆட்சி பரவுவதை ஏற்றுக் கொள்வதற்குச் சமம் என்று பிரசாரம் செய்தது. இதையடுத்து கம்யூனிஸ்ட்டுகள் வியட்நாமில் பரவுவதை தடுக்க பிரான்ஸ¤க்கு அமெரிக்கா ஆயுதங்களையும் உதவிகளையும் வாரி வழங்கியது.

இதையடுத்து வியட்நாம் யுத்த பூமியானது! அங்கே விண்ணிலிருந்து சதா குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. யார் நம் மீது குண்டு மழை பொழிகிறார்கள்? ஏன் நம் நாட்டில் யுத்தம் நடக்கிறது என்று கூடத் தெரியாமல் அந்த ஜனங்கள் செத்து வீழ்ந்தனர். இன்னொருபுறம் ஹோசிமினின் கெரில்லா படைகள் எதிரிகளுக்கு மூச்சு திணறும்படி தண்ணிகாட்டியது. இந்தப் போர் பல ஆண்டுகள் நடந்தது.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் மாறி ஒருவர் என மூன்று ஜனாதிபதிகள் மாறினர். வடக்கு வியட்நாமில் ஹோசிமினின் தலைமையில் ‘வெற்றியே குறிக்கோள்’ என்று அவரது படை ஒருமுகமான சிந்தனையோடு பிரான்ஸின் படைகளை எதிர்த்து மூர்க்கத்துடன் போராடியது.

வடக்கு வியட்நாமையும் தெற்கு வியட்நாமையும் ஒன்று சேர்ந்து தனிநாட்டை உருவாக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஹோசிமின் சவால்விட... அமெரிக்கா அடிபட்ட புலி போல கர்ஜித்தது. அந்த சமயம் ஹோசிமினிற்கு எதிர்பாராத திசையில் இருந்து மாபெரும் உதவி ஒன்று வந்தது.

போரை ஆரம்பிப்பது சுலபம், முடிப்பதுதான் கஷ்டம் இந்த சத்திய வாக்கியம் வியட்நாமிலும் உண்மையானது. கம்யூனிஸ்ட்டுக்களின் கைகளுக்குள் வியட்நாம் போய்விடக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் இந்தக் குறிக்கோள்களுக்காக தான் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்து வியட்நாமில் தனது மூக்கை நுழைத்தது அமெரிக்கா.
தெற்கு வியட்நாமில் அமெரிக்கா ஒப்புக்காக கட்சியில் அமர்த்திய கைப்பாவை அரசு கம்யுனிஸ்ட்டுகளை நசுக்குகின்றேன் என்று பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுமக்களை வீதியில் ஓடவிட்டு விரட்டி விரட்டிச் சுட்டது.

கம்யூனிஸ்ட்டுக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல் கொல்லப்பட்டனர். இதற்கு நாட்டில் எதிர்ப்பு கிளம்ப... அமைதியே உருவான புத்த பிட்சுகள் கூட போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளிடமே இரக்கம் காட்டாதவர்கள் புத்த பிட்சுகளிடமா இரக்கம் காட்டுவார்கள்? இவர்களின் போராட்டமும் மிருக பலத்தோடு நசுக்கப்பட்டது. அதனால் புத்தபிட்சுகள் ‘தீக்குளிப்பு’ என்ற சத்தியாக்கிரக ஆயுதத்தை கையில் எடுத்தனர்.

கடைசியில் 1965 ஆம் ஆண்டு வேறு வழியின்றி அமெரிக்கா, வியட்நாம் போரில் நேரடியாக குதித்து. தாங்கள் போரிடுவது ஒரு இராணுவத்தை எதிர்த்து அல்ல அதிரடிப் போரில் தீவிரப் பயிற்சி பெற்ற கெரில்லாப் படையினரை எதிர்த்து என்பதால் அமெரிக்கா இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாமில் அமைதியாக இருந்த கிராமங்களின் மீதும் கூட விமானத்திலிருந்து குண்டுகளை வீசியது.

அமெரிக்காவின் நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பார்த்து மிரளாத ஹோசிமினின் கெரில்லாப் படை, அமெரிக்காவின் இராணுவத் தளங்களுக்கு குண்டு வைத்தது. போரில் அமெரிக்கா நுழைந்த முதல்வருடமே தாங்கள் குறைவான வீரர்களைப் பலி கொடுத்து அதிகமான கெரில்லா படையினரை அழித்திருக்கிறோம் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டது.

எண்ணிக்கை அடிப்படையில் வேண்டுமானால், அமெரிக்கா அப்போது ஹோசிமினின் படைகளைவிட போரில் முன்னிலையில் இருந்தது என்று சொல்லலாம். ஆனால் அடுத்தடுத்து அது சந்தித்த சோதனைகள், அமெரிக்க வீரர்களின் மனவுறுதியை குலைத்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளிலும் குளிரிலும் தாக்குப் பிடிக்க முடியாத பல அமெரிக்க வீரர்கள், போர்களத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பி ஓடினர்.

அதனால் ஆனானப்பட்ட அமெரிக்காவே கடைசியில் ஹோசிமினைப் பார்த்து ‘சமாதானமாகப் போய் விடலாமே’ என்று தூதுவிட்டது.

நட்டநடுவீதியில் ஆடாமல் அசையாமல் சுழறாமல் உட்கார்ந்த இடத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எரித்து கொண்டார்கள். இதைப் பார்த்து கலவரமடைந்த அமெரிக்காவின் கைபாவை அரசு. புத்தபிட்சுகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட அமெரிக்கா மீது அமெரிக்கர்களுக்கே வெறுப்பு உண்டானது.

1968 ஜனவரி மாதம் வியட்நாம் போரில் ஒரு திருப்புமுனை. தெற்கு வியட்நாமில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த சமயம் சாதாரண பொதுமக்கள் போல உடைஉடுத்தி நாடு முழுவதும் ஊடுவியிருந்த ஹோசிமினின் கெரில்லா படையினர் துல்லியமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படி திடீர்என்று ஒன்று சேர்ந்து அமெரிக்கப் படைகளையும் அதன் கைப்பாவை அரசையும் எதிர்த்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினர்.

இதை சற்றும் எதிர்பாராத அமெரிக்க படைகள் நிலை தடுமாறின. மின்னல் வேகத்தில் நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரக அலுவலகத்தைகூட கம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினர். அமெரிக்காவால் இந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. தனது கோபத்தை தணித்துக் கொள்ள அது தனது கட்டுப்பாட்டில் இருந்த எல்லா கிராமங்களிலும் மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்தது. இதில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் பரிதாபமாக இறந்தனர்.

இவர்களிடமிருந்து தப்பிக்க பிள்ளைகுட்டிகளோடு காட்டாற்றில் விழ்ந்தவர்கள் ஜலசமாதி ஆயினர். இந்த எல்லா அவலங்களையும் டி.வி.யில் பார்த்த அமெரிக்க மக்கள் ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக் கொண்டனர். அதனால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட இருந்த ஜோன்சன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

ஜோன்சனை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்ட நிக்ஸன். வியட்நாமில் மேற்கொண்டு எந்த அவமானமும் அடையாமல் தனது படை வீரர்களை நாட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன்’ என்று பிரசாரம் செய்துதான் ஜெயித்தார்.

என்றாலும் அவராலும் வியட்நாமிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நிக்ஸன் ஒரு தந்திரம் செய்தார். ஒரு பக்கம் வியட்நாமில் இருந்த பெரும்பாலான தன் துருப்புக்களை திருப்பி அழைத்துக் கொண்டார். மறுபுறம் கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வடக்கு வியட்நாம் மீது தனது விமானங்களை ஏவினார். இதையடுத்து இடைவிடாது இருபத்தி நான்கு மணி நேரமும் வியட்நாம் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப் போரில் தான் பயன்படுத்திய குண்டுகளுக்கு இணையாக குட்டி நாடான வியட்நாம் மீது அமெரிக்கா குண்டுகளை தூவியது. இதில் லட்சக்கணக்கானோர் பரிதாபமாகத் துடிதுடித்து இறந்தனர். இந்த அட்டகாசங்கள் அனைத்தையும் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்கள் ஒரு காட்சி உறைய வைத்தது.
1972 மார்ச் மாதம் அமெரிக்க விமானம் போட்ட நேபாம் குண்டு ஒன்றில் ஒரு கிராமமே தீப்பற்றி எரிய சொந்தப்பந்தங்கள் என்று எல்லோரையும் கரும விட்டு விட்டு தப்பி ஓடி வரும் நிர்வாணச் சிறுமியின் அழுகை அத்தனை பேர் மனதையும் பிசைத்து எடுத்தது. இந்தச் சிறுமி எப்படியோ கனடா சென்று விட்டார். வளர்ந்து பெரியவளானதும் தனது 20 வயதில் கடந்த 1997 ஆம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டி மூலம் தன்னை இனம் காட்டிக் கொண்டார்.
இந்தக் கொடுமைகள் அனைத்தும் அமெரிக்காவில் கடும் யுத்த எதிர்ப்பு மனப்பான்மையை தோற்றுவித்து விடவே, வேறு வழியில்லாமல் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் தனது துருப்புக்களை வேகவேகமாக திருப்பி அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

வியட்நாமின் அமெரிக்க தூதரகத்தின் கட்டத்தின் மாடியிலே வந்து ஹெலிகொப்டர் இறங்க.. போரை நடத்தியவர்கள் சந்தடியில்லாமல் மூட்டை முடிச்சுகளை கட்டினர். வியட்நாம் போர் ஒரு வழியாக முடிவடைந்தது. அமெரிக்கப் படைகள் அகலவும் வட வியட்நாம் தென் வியட்நாமைக் கைப்பற்றியது.

இந்தப் போரில் சுமார் ஐம்பதாயிரம் வீரர்களை பலிகொடுத்துவிட்டு அமெரிக்க இராணுவம் வெறுங்கையோடு திரும்ப வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும் ஒரு நாடாக செங்கொடியின் கீழே இணைந்தது. இந்த அபூர்வ காட்சியைப் பார்ப்பதற்காக தனது வாழ்நாளை செலவிட்ட ஹோசிமின் இந்த இணைப்பு நிகழ்வதற்கு சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்றாலும் அந்த நாட்டு மக்கள் அவரை மறக்கவில்லை. ஒன்றாக இணைந்த தங்கள் தேசத்தின் தலைநகர் சைகோனுக்கு இவர்கள் ‘ஹோசிமின் சிட்டி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

முத்தமிழ் வேந்தன்

கட்டுநாயக்கா விமான தளம் மீதான தாக்குதல்

Kattunayaka airport attack[2001] part-1



Kattunayaka airport attack:-Part-2

ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 4) பகுதி - 3



ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 3) பகுதி - 3



ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 4) பகுதி - 2



ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 3) பகுதி - 2.



ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 1) பகுதி - 3.



ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 2)



ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 1) பகுதி - 1



ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 1) பகுதி - 2


ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 4) பகுதி - 1


ஓயாத அலைகள் - 3 (கட்டம் - 3) பகுதி - 1.

Monday, April 20, 2009

பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்: வைகோ


விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, கருணாநிதி முன்கூட்டியே
இரங்கல் கவிதை எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது கனவு பலிக்காது.
பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார் என்று வைகோ பேசினார்.

அமைந்தகரையில் நடந்த தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கை தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த மூன்று பேருக்கு மட்டுமே
கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். தற்போது, இலங்கைத் தமிழருக்கு
ஆதரவாளர் என்பது போல கபடநாடகம் ஆடுகிறார். வரும் தேர்தலில்
காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பெறப் போவதில்லை. ஆந்திரம், மராட்டியம்,
உ.பி., உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் நிலைமை பரிதாபமாக உள்ளது.

தமிழகம், புதுவையில் அவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்க போவதில்லை.
தி.மு.க.,விற்கும் ஒரு இடம் கூட கிடைக்காது. சேது சமுத்திர திட்டம் குறித்து
நான் சொன்ன கருத்தை வைத்து, அ.தி.மு.க.,வுடன் நெருடல் இருப்பதாக
ஒரு 'டிவி' பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால், அதற்கு அடுத்த கேள்விக்கு
இந்திய பிரதமராக வர அனைத்து தகுதியும் உள்ளவர் ஜெயலலிதா என்று
நான் கூறிய கருத்தை வெளியிடவில்லை.

தற்போது, தனித்தமிழ் ஈழம் அமைய அ.தி.மு.க., பாடுபடும் என்று
அ.தி.மு.க., அறிவித்திருப்பது மிக முக்கியமான விஷயம். முடிவெடுத்தால்
அந்த முடிவில் உறுதியாக இருக்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும்
தெரியும். பிரபாகரன் பிடிபட்டால் போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும்
என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். ஆனால், தற்போது தனியார் 'டிவி' ஒன்றுக்கு
அளித்த பேட்டியில், 'பிரபாகரன் எனது நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல.
பிரபாகரன் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்,' என்று கூறியிருக்கிறார்.
பிரபாகரன் எப்போது சாவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி

ஈழத்தமிழர் பிரச்னைக்காகவே மருத்துவமனைக்கு சென்று படுத்துக்
கொண்டவர் அவர். முன்கூட்டியே பிரபாகரனுக்கு இரங்கல் கவிதையை
கருணாநிதி எழுதி வைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும். அவர்
எண்ணம் பலிக்காது; பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்.
எனக்கு மரண தண்டனை விதித்தாலும், பிரபாகரனுக்கு
ஆதரவாகத் தான் பேசுவேன்.


ராஜபக்சேவை வன்னியில் உள்ள புதைகுழியில் புதைக்க வேண்டும்.
மின்வெட்டு; விலைவாசி உயர்வு; மணல் கொள்ளை; ஸ்பெக்டரம் ஊழல்;
கருத்து சுதந்திரத்தை நசுக்குகின்ற இந்த அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.
இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணிக் கட்சிகளுக்கு,
மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

வான்புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதிசெய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.

•1985-86 காலப்பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்கள்.
•செப்டம்பர் 27, 1998 - 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில் பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
•2000 - 'வான்புலிகள் ஆண்டு' என தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது.
•கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.
•ஜனவரி 26, 2005 - இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை.
•ஆகஸ்டு 11, 2006 - யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
•மார்ச் 26, 2007 - அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26ம் திகதி மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.
•ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.
•ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசி தாக்கின.
•அக்டோபர் 22, 2007 - எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர் கொல்லப்பட்டனர்.
•ஆகஸ்ட் 26, 2008: திருகோணமலை துறைமுகத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் இலங்கைக் கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டு 35 பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இத்தாக்குதலில் 10 கடற்படையினர் காயமடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்தது.
•செப்டம்பர் 9, 2008: வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல்
•அக்டோபர் 28, 2008: மன்னார் தள்ளாடி படைத்தளம் மீதும் கொழும்பு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தினர்.
•பெப்ரவரி 20, 2009:கொழும்பு வான் படையினரின் தலைமையக கட்டடம் அதற்கு அருகில் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்தின் மீதும் வான்புலிகளின் கரும்புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு, 47 பேர் காயமடைந்தனர்.

வான்புலிகளின் வலு
வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது. இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இவைதவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.

முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள். இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.

வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தாக்குதல் முறை

தொடக்கத்தில், வான்புலிகள் யப்பானிய கமிகாச en:Kamikaze போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கை தாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது. விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் en:Blitzkrieg முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.

பெப்ரவரி 20, 2009 தாக்குதல்

விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் கரும்புலிகள் பெப்ரவரி 20, 2009 அன்று சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இத்தாக்குதலில் வான் புலிகளின் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் வீரமரணம் அடைந்ததாக புலிகள் தெரிவித்தனர்.

விமானவியல் தொழில்நுட்பமும் விமான ஓட்டுனர் பயிற்சியும்

வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் "சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்ற அவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்.

வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் "Intelligence sources" முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.

இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒரு விமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன.

விமான ஓடுதளம்

இரணைமடு பகுதியில் பெரிய விமானங்களும் வந்து இறங்கக் கூடிய அளவு ஓடுதளம் ஒன்று இருப்பதை செய்மதிப் படங்கள் மூலம் உறுதி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த விடயம் 2005 ஆண்டளவில் தெரியவந்தது. சிறிய ஓடுதளம் முல்லைத்தீவின் வேறு பகுதிகளிலும் இருக்கலாம்.



“ ஈழத்தமிழன் இறக்கை கட்டி

முகிலினுக்குள்
வாழத்தொடங்கிய வரலாற்று நாளிதுதான்.
உலகத் திசையாவும் உதைபட்டு
அகதியென
நிலத்திற் புல்லாகி நின்ற தமிழினத்தோன்
வானத்தில் ஏறி
வரிசையெனப் பெருமகிழ்வில்
கானத்தைப் பாடிக் களித்தான்.

—கவிஞர் புதுவை இரத்தினதுரை

கடற்புலிகள் வரலாறு


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்குகின்றார்.

கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.

•ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது.
•1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
•1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.



தாக்குதல் முறை

பல கடற்கலங்களில் அணிகளாக சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.
கடற்புலிகள் பிரிவு

•கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு

கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம்.

இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் . கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.

இவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களாக கருதப்படுபவை

*கொழும்புத் துறைமுகத் தாக்குதல்
*1995 ஏப்ரல் 19 திருகோணமலை துறைமுகத்தில் ரணசுறு சூரயா மீது தாக்குதல்
*கற்பிட்டிக்கடற்பரப்பில் வைத்து சகரவர்த்தன கப்பல் மீதான தாக்குதல்.

....................................................................................

•விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி

கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது கடற்புலிகளின் ஒரு அங்கமாக இருக்கும் ஈரூடகப் படையணி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.

.....................................................................................

•புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் பல காலமாக நீர்மூழ்கி கப்பல் பிரிவு ஒன்றை கட்டமைப்பதற்காக முயற்சி செய்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புலிகள் இதைப் பற்றி எந்த வித அதிகார பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. இந்த தகவலை இந்திய புலனாய்வுத் துறையே வெளிப்படித்தியிருப்பதாக்க ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.


....................................................................................

•தமிழர் கப்பற்கலை

தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.

Sunday, April 19, 2009

keetru part1



keetru part2

Saturday, April 18, 2009

Why Tamil Eelam?........

Friday, April 17, 2009

மற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம் நமக்குத் தேவையில்லை...

தமிழ் மக்கள் அனைவரும் தற்போது பேரெழுச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் மனதில் சில தடுமாற்றங்களும் குழப்பங்களும் உருவாகியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. வன்னிக் களமுனை தொடர்பாக வந்த செய்திகளும், சிங்கள அரசின் மிகைப்படுத்தப்பட்ட வெற்றிப் பிரச்சாரங்களும் வன்னி மக்களின் பேரவலங்களும் ஒன்றுசேர்ந்தே இத்தகைய தடுமாற்றங்களை பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
இவ்வகையான சலனங்கள் உருவாகுவது யதார்த்தமானது என்றாலும், தமிழர்தம் போராட்டத்தின் மிக முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கின்ற இன்றைய வேளையில் இவற்றிலிருந்து விடுபட்டு தெளிவு பெறுவது மிக மிக அவசியமானது.

புலிகள் தங்களின் போராட்டகால வரலாற்றில், இப்பொழுது பின்வாங்கிச் சென்றுள்ளதைப் போன்று இதுவரைகாலமும் பின்வாங்கிச் சென்றதில்லை. புலிகள் தற்பொழுது மிகச்சிறிய நிலப்பரப்புக்குள்ளேயே தங்களை நிலைப்படுத்தியிருக்கின்றார்கள்.

அத்துடன் சிறிலங்கா அரசு செய்து வரும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு புலிகளின் இவ்வாறான "பின் நகர்வு நடவடிக்கை" நல்லதொரு வாய்ப்பாகப் போய்விட்டது. இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி சிங்கள மக்களையும் சர்வதேசத்தினையும் இதுவரை ஏமாற்றி வந்த சிங்கள அரசு இப்பொழுது தமிழ் மக்களையும் ஏமாற்ற முற்பட்டிருக்கின்றது.

கடந்த சில நாட்களாக வன்னிக்களமுனை தொடர்பாக சிங்கள அரசினால் வெளியிடப்பட்டுவரும் தகவல்கள் தமிழ்மக்களை தடுமாற்றமடைய வைப்பனவாகவே இருக்கின்றன. புலிகள் இன்னும் சில நாட்களில் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று கங்கணங்கட்டிக் கூறுகின்றது அரசு.

அண்மையில் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்த சண்டைகளில் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரை தாங்கள் கொன்றுவிட்டதாகவும், புலிகள் தற்பொழுது, பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட மிகக்குறுகிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் புலிகளிடம் எஞ்சியிருக்கின்ற பகுதியையும் தாங்கள் பிடித்து விடுவோம், அதற்காக ஐந்து முனைகளிலிருந்து ஒரேசமயத்தில் முன்னேறி அதிரடியாக அதை கைப்பற்ற இருப்பதாகவும் சிங்கள அரசு அறிக்கை விட்டிருந்தது.

இவை அனைத்தும் பெரும்பாலான தமிழ்மக்கள் மத்தியில் கலக்கத்தினை உண்டுபண்ணியிருக்கின்றது. புலிகள் அழிந்து விடுவார்கள்... இனிமேல் தமிழீழம் என்பது கனவாகவே போய்விடும் என்று கலங்க ஆரம்பித்துவிட்டார்கள். சாதாரண கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்க்ளுக்கு இவை அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள்தான்.ஆனால் இவற்றினை முழுமையாக நம்புவது மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இப்பொழுது சிங்கள அரசுக்கு மிகவும் நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருப்பது சர்வதேச நாடுகளெங்கும் வாழும் தமிழர்கள் யாவரும் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் தான். முன்னொருபோதும் இல்லாதவகையில் புலம்பெயர் தமிழ்மக்கள் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தத் தொடங்கியிருந்தனர். புலிக்கொடிகளை தம் கைகளில் ஏந்தியதன் மூலம் புலிகளே தமிழர்களது பிரதிநிதிகள், காவலர்கள் என உலகுக்கு வெளிப்படையாகவே வெளிப்படுத்தினர்.

இவை தொடர்ந்தால் சர்வதேச மட்டத்தில் புலிகளின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என உணர்ந்த சிங்கள அரசு இப்போராட்டங்களை எவ்வாறாகினும் தடுக்க நினைத்தது. ஆனால் அது இலகுவான காரியமாக இருக்கவில்லை. இப்பொழுது உருவாகியுள்ள களநிலை இறுக்கத்தினை தமது வெற்றியாக அறிவித்து அதன் மூலம் தமிழ்மக்களின் உளவுரணையும் புலிகள் மீதுள்ள அசையாத நம்பிக்கையையும் சீர்குலைப்பதே சிங்கள அரசின் முதல் நோக்கம். மக்களின் மனதில் தடுமாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் போராட்டங்களையும் மட்டுப்படுத்தலாம் என நினைத்தது சிறிலங்கா அரசு.

இவ்வாறான சிறிலங்கா அரசின் சதித்திட்டங்களின் பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்தியாவின் "றோ" அமைப்பு தான். சிங்கள அரசின் யுத்தத்திற்கு நேரடியாகவே உதவிகளைச் செய்து வரும் இந்தியா, தமிழர்கள் மீது மறைமுகமாக உளவியல் யுத்தமொன்றினை மேற்கொள்வதற்கு தனது "றோ" அமைப்பினை வைத்து திட்டங்களை வகுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இந்திய இராணுவம் இப்போது வன்னிக் களமுனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக, புதுக்குடியிருப்புப் பகுதியில் போராளிகள் மீது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மாறாக பிரயோகிக்கப்பட்டிருந்த விஷவாயுத் தாக்குதல் கூட இந்திய இராணுவத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ்தான் நடந்தேறியுள்ளது எனத் தெரிகின்றது.

பாதிக்குமேல் ஆளணி வளத்தினை இழந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினை தனது ஆளணி ஆயுத உதவிகளைக் கொடுத்து ஈழத்தமிழினத்திற்கு ஈனத்தனமான துரோகமிழைத்து வருகின்றது காந்தி தேசம். பழிதீர்க்க நினைக்கும் காந்திதேச காங்கிரஸிற்கு தமிழ் மக்களின் கண்ணீரும் காலமும் கட்டாயம் பதில் கொடுக்கும்.
இவ்விடத்தில், வன்னிமக்களின் நிலை மிகவும் ஆபத்தானதாகவே தோன்றுகின்றது.

ஏனெனில், இராணுவத்தின் அடுத்த இலக்காக இருப்பது இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் செறிவாக இருக்கும் பாதுகாப்பு வலயம் தான். இதன்மேலும் செறிவான தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் இப்பொழுது தோன்றியுள்ளது. அவ்வாறு நடந்தால், மிகப்பெரும் மனித பேரவலத்தினை ஈழத்தமிழினம் எதிர்நோக்க வேண்டிவரும். மடிந்தாலும் தங்கள் மண்ணில் புலிகளுடனேயே மடிவோம் என்ற முடிவில்தான் வன்னி மக்கள் இருக்கின்றார்கள். இன்னும் தன்மானத்துடன்.

கள இறுக்கத்தினை புலிகளின் தோல்வி என வர்ணித்து தமிழ் மக்களின் மனதில் குழப்பத்தினை ஏற்படுத்தி அவர்கள் சோர்ந்து போவர்கள் என பார்த்துக் கொண்டிருந்த சிங்கள மற்றும் இந்திய அரசிற்கு பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார்கள் புலம்பெயர் தமிழ் மக்கள். வன்னி மக்களின் ஆபத்தான அவல நிலையைக் கண்டு வீறிட்டு பொங்கியெழுந்தது தமிழினம்.

இம்முறை போராட்டம் ஓயாத அலைகளாய் ஓங்கி அடிக்கத் தொடங்கியிருக்கின்றது. புதிய பரிமாணம் பெற்றன புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள். வீதி மறியல்,சாகும்வரை உண்ணாவிரதம் என மாற்றம் பெற்று அனைத்து மக்களினதும் ஒன்றுதிரண்ட உணர்வெழுச்சியுடன் பொங்கி பிரவாகிக்கின்றது புலம்பெயர் தேசமெங்கும். இளையோர் அணி முன்னின்று வழிநடத்த ஒன்று திரண்ட தமிழர் சர்வதேச சமூகத்தினை நோக்கி தமிழர் தம் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.. ஈழத் தமிழரின் நியாயமான கோரிக்கைகள் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் என்ற நிலையில் தொடருகின்றது போராட்டம்.

ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் தன்னிகரற்ற தலைவரும் அவரின் தலைமையிலான தமிழர் படையான புலிகளும் யாருக்கும் அடிபணியாத தீரம் நிறைந்தவர்கள். விலை போகாதவர்கள். தம் மக்களுக்காக உயிரையே துச்சமென மதிக்கும் சிந்தையுடைய தியாக சீலர்கள். அவர்களின் முன் சிங்களப் படையென்ன...? எந்தப் படை வந்தாலும் சிதறிச் சின்னாபின்னமாகிப் போகும். அதில் எந்த சந்தேகமும் ஈழத்தமிழராய் உள்ள எவருக்கும் வரக்கூடாது.

புலிகளின் தளபதிகள் சிலர் களத்தில் கொல்லப்பட்டதாக சிங்கள அரசால் வெளியிடப்பட்ட தகவல்கள் எந்தளவுக்கு உண்மையானவை என்று தெரியவில்லை. அது உண்மையாக இருக்கலாம். இல்லாமல் விடலாம். ஆனால் ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.சிங்கள இராணுவத்தளபதி செத்தால் அந்த இடத்திற்கு அவரைப்போல் வேறொருவர் வருவதற்கு இன்னொருவரை உருவாக்கி வைத்திருக்கமாட்டார். ஆனால் புலிகளின் ஒரு தளபதி தன்னைவிட திறமையாக ஆயிரமாயிரம் போராளிகளை தனக்குப் பின்னால் உருவாக்கியிருப்பார்கள்.

எவ்வகையான இழப்புக்களையும் தாண்டி தீரமுடன் வெல்லும் ஆற்றல் பெற்றது தமிழரின் புலிப்படை.புலிகளை யாராலும் அழிக்க முடியாது. உணர்வுள்ள கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும்வரைக்கும் புலியாய் இருந்து போராடுவான்.

தமிழ்மக்களே ! உங்கள் அனைவரினதும் கைகளில் மிக முக்கியமான வரலாற்றுக் கடமை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதை நிறைவேற்ற வேண்டிய தருணம் இதுதான். உங்கள் உறவுகளை அழிவிலிருந்து காப்பாற்றவும் உங்கள் தமிழீழ தேசம் விடிவுபெறவும் நீங்கள் ஒரு தன்மானமுள்ள தமிழனாய் ஆற்றவேண்டிய கடமையை நிறைவாகச் செய்யுங்கள். எந்த நிலையிலும் மனம் தளராதீர்கள்! உறுதியோடு போராடுங்கள்! அசையாத நெஞ்சுறுதியோடு களத்தில் நிற்கும் உங்கள் தலைவன் கரங்களை பலப்படுத்துங்கள்! தீர்க்கதரிசனமான அவரின் காய்நகர்த்தல்களுக்கு பெருவெற்றியைத் தேடிக்கொடுங்கள்!

புலம்பெயர் உறவுகளே!! உங்கள் தேசத்தின் விடிவு இப்பொழுது உங்கள் கைகளில். உங்களின் போராட்டங்கள் யுத்தகளத்தினை விட வலிமை வாய்ந்தவை. களநிலை மாற்றங்களைப் போலல்லாது உங்கள் போராட்டங்கள் நேரடியான விளைவுகளை ஏற்படுத்தும். உலகவரலாற்றில் அனைத்து விடுதலைப் போராட்டங்களும் மக்களின் பேரெழுச்சியோடுதான் வெல்லப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான ஓயாத பேரெழுச்சிக்காகத்தான் தமிழீழ தேசம் இவ்வளவு நாளும் காத்திருந்தது.எனவே... களமறிந்து; காலமறிந்து

தன்னலம் விட்டு தன்மானத்தோடு தரணியெங்கும் சேருங்கள்!

சுயநலம் விட்டு சுய உரிமைக்காய் சர்வதேசமெங்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்.

மற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம் நமக்குத் தேவையில்லை. எமது எதிர்கால சந்ததி நம்மை நாளை கேள்வி கேட்கும்போது , அதற்கு நெஞ்சை நிமிர்த்தி பதில்சொல்ல, நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

எங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு சர்வதேசம் உடன்படும்வரை தளராமல், சிதறாமல், ஓயாமல் தொடர்ந்து போராடுவோம்!

-பருத்தியன்-

Thursday, April 16, 2009

தமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்

நீண்ட அடக்குமுறைக்குள் அகப்பட்டு திணறடிக்கப்பட்ட தமிழர்களின் தேசிய வாழ்வு மீதான ஆவல் வலுப்பெற்று அதற்கான தேடல்கள் தீவிரமடையத் தொடங்கியதும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களுடைய நியாயமான போராட்டத்தை இராணுவ பலம் கொண்டு அடக்க ஆரம்பித்தது. அன்றைய யதார்த்தத்தின் நிர்ப்பந்தம் கருதி இயல்பாக முகிழ்ந்த ஆயதப் போராட்டமானது தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டமாக மாறிய பின் சிங்களப் பேரினவாதத்தின் இராணுவ யுத்தம் எம் மக்களின் மீது கட்டவிழ்த்து விட்ட கொடூரங்களினாலும், இடம்பெயர்வு அவலங்களினாலும் சிங்களத் தேசத்தால் எம் மீது திணிக்கப்பட்ட போர் எமது சமூகத்தின் மீது நிர்ப்பந்தித்த சமுதாய ஒழுங்கு சீர்குலைவுகளினாலும் நிர்க்கதியாகி உறவுகளை இழந்து ஆதரவு அற்று கைவிடப்பட்ட சமூகமாக வாழும் ஈழத் தமிழினம் தன் இன அடையாளத்தையும் இராணுவ வன்முறையையும் எதிர்ப்பதற்கு மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளது.

தமிழர்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்திற்கு ஒரு படிமுறை வளர்ச்சி உண்டு. நடந்து முடிந்த பேச்சுவார்த்தைகளும் இன்று முன்வைக்கப்படும் பேச்சுவார்த்தை என்ற கோசங்களும் தமிழர்கள் நடந்து வந்த பாதையில் கண்டு வந்த ஒவ்வொரு எல்லைக் கோடுகள் ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் அரசியல் உரிமைகளைப் பெற்று வாழப்போராடிய தமிழினத்தை தன்னாட்சி உரிமைக்காகப் போராடும்படி சிங்கள அரசின் இனவாத செயல்பாடுகள் நிர்ப்பந்தித்தன.

ஜனநாயக வழியில், சாத்வீக முறைகளில் தமிழர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தை வன்முறை வடிவில் ஆயதப் போராட்டப் பாதையில் அரச பயங்கரவாதம் தள்ளியது. இதன் விளைவாய் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான ஆயுதப் போராட்டத்திற்கு தலைகொடுத்த தமிழர் தேசியம் அதை முன்னெடுக்கும் தகைமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒப்படைத்தது. இந்த தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் வாக்குரிமை மூலம் அங்கீகரித்து ஆதரவு வழங்கினர். ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டுவது என்ற இலட்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அன்றிலிருந்து இன்று வரை உறுதியாகவே இருந்து வருகின்றனர். எத்தனையோ சோதனைகள் எண்ணற்ற இராணுவ வன்முறைகள் மக்களை மனித கேடயங்களாகப் பாவித்து முன்னெடுக்கப்பட்ட போர் நகர்வுகள் என்று நெருக்கடிகள் சூழ்ந்த போதும் உறுதி குலையாத இலட்சியப் பற்றோடு அந்த அரசியல் இலட்சியத்திலிருந்து வழுவாது கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து போராட்டத்தை முன்னகர்த்தி வந்தனர்.

இதன் விளைவாய் இன்று தமிழர்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டம் சர்வதேச பரப்புக்குள் உயர்நிலை வளர்ச்சி கண்டு சர்வதேச அங்கீகாரத்திற்கான வேண்டுதல்களுடன் முன்னகர்த்தப்பட்டு வருகின்றது. இன்று தமிழ் மக்கள் ஏகோபித்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது அரசியல் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு போராட்டத்தின் இன்ப துன்பங்களில் முழுமையாகப் பங்காற்றி வருகின்றனர். இந்த அரசியல் யதார்த்தத்தை நிராகரிக்க முடியாத தமிழ் அரசியல் கட்சிகளும், தாய்த் தமிழகமும், புலம்பெயர்ந்த சமூகமும் விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் ஏற்றுக் கொண்டு தமிழர்களுக்கான தலைவிதியை நிர்ணயிக்கும் தமிழர் தேசியப் பிரவாகத்தை நிலைநிறுத்த முனைந்துள்ளனர். தாய்த் தமிழகம், அகில பாரதம், அனைத்துலக நாடுகள் என்று தமிழ் மக்கள் தமிழரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், நிறுவனங்கள் என்று தமிழினமே விடுதலைப் புலிகளின் பின்னால் அணிதிரண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வருகின்றனர். தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய பரிமாணம் சிங்கள அரசை திகைக்க வைத்துள்ளது.

சதித்தனமான அரசியல் அணுகுமுறைகள் மூலமும் கடுமையான பொருண்மிய தடைகள் வாயிலாகவும் கொடூரத்தனமான இராணுவ வழிமுறைகள் மூலமும் தமிழரின் விடுதலை எழுச்சியை நசுக்க முயன்ற சிங்கள அரசு இந்த புதிய அரசியல் சூழலைக் கண்டு அச்சமடைந்துள்ளது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றலை தனது அரச இயந்திரம் இழந்து விட்டதென்ற கையறு நிலையில் போராட்டத்தை ஒடுக்க மாற்றுவழிகளை சிங்கள அரசு தேடி தமிழர்களின் நியாயபூர்வமான போராட்டத்தை சிதைக்கவும் கொச்சைப் படுத்தவும் முனைந்துள்ளது. இந்தப் போலித்தனமான மாயைத் தன்மைகளை இந்திய அரசு புரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது புரிந்து கொண்டாலும் ஏற்க மறுப்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று.

இந்திய அரசின் மௌனம், உலக நாடுகளின் பாராமுகம் சிங்கள அரசை இராணுவ மூர்க்கத் தனத்திற்குள் தள்ளி “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்„ என்ற மேலைத்தேய நாடுகளின் அரசியல் நிலைப்பாட்டை சிங்கள அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த முனைகின்றது. இதனால் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சர்வதேசத்தின் முன்னால் சித்தரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் சிங்கள இன முரண்பாட்டின் ஆழ அகலங்களை சரிவர அறிந்து கொள்ளாத சில மேற்குலக நாடுகள் அறிந்தும் மௌனமாக இருக்கும் சர்வதேச சக்திகள் தாங்கள் தயாரித்த பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் இணைத்து சிங்களப் பேரினவாதத்திற்கு மகிழ்ச்சியூட்டியுள்ளன.

முன்னர் தமிழர்களின் தாயக நிலத்தை சிதைக்கும் வழிமுறைக்கு விவசாயக் குடியேற்றம் என்று பெயரிட்டு தமிழர் நிலங்களை அபகரித்தது போல பின்னர் தமிழரின் தேசிய தனித்துவத்தை அழித்தொழிக்க ஒரே நாடு ஒரே மக்கள் என இலங்கைத் தேசியம் பேசியது போல இன்று தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தி போராட்டத்தை ஒடுக்க சிங்கள அரசு முனைந்து வருகின்றது. அத்துடன் களமுனைச் செய்திகளை திரிபுபடுத்தி தனது இழப்புக்களை மூடிமறைத்து விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற மாயையை பிரச்சாரப்படுத்தி சர்வதேசத்தையும் இதன் மூலம் நம்ப வைத்து முழு இலங்கையையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உருவகமாக ஸ்தாபிக்க முனைந்துள்ளது.

புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல. அது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒரு விடுதலை இயக்கம் தமிழ் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரு மக்கள் இயக்கம். தமிழர் மத்தியிலுள்ள பாராளுமன்ற அரசியல் கட்சிகளாலும் சமூக நிறுவனங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அரசியல் தலைமை சக்தி தான் புலிகள் இயக்கம். வெளிப்படையாகவே தெரிகின்ற இந்த அரசியல் உண்மையை உலகின் சில அரசுகள் கருத்தில் எடுக்காதது வேதனை அளிப்பதாகவே உள்ளது. இன அழிப்பை மேற்கொண்டுவரும் சிங்கள அரசை சுற்றவாளிகள் போலவும் அதன் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் ஒரு விடுதலை இயக்கத்தை குற்றவாளிக் கூண்டிலும் நிறுத்த முயலும் இந்த அரசுகளின் செயல் வருத்தமளிப்பதாகவே உள்ளது. நீதியைக் கண்டித்து அநீதிக்கு துணைபோவதாகவே உள்ளது.

அரசியல் வன்முறையின் தோற்றப்பாடு பற்றி ஓர் ஆழமான பார்வை இருந்தால் தான் உண்மையான விடுதலைப் போராட்டங்களுக்கும் குருட்டுத் தனமான பயங்கரவாத செயல்பாடுகளுக்கும் மத்தியில் வேறுபாடு காண முடியும் என்ற தலைவர் பிரபாகரனின் கூற்றை உலக சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலம் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை எவராலும் நிறுத்திவிட முடியாது. உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை நசுக்க முற்படும் போது அது தேசிய எழுச்சி கொள்வதை எவராலும் தடுக்க முடியாது. 30 ஆண்டுகால ஆயுதப் போராட்ட வரலாற்றில் தமிழர் போராட்டம் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்தாலும் இறுதியில் மக்களின் ஒன்றுபட்ட பலத்தால் அவை வெற்றி கொள்ளப்பட்டே வருகின்றன.

தமிழரின் தன்னாட்சி உரிமைக்கான ஆயுதப் போராட்டம் இறுதி வெற்றியை நோக்கி வீறுநடை போடும் இன்றைய சூழலில் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பின்தொடர்ந்து தலைவர் பிரபாகரனின் கரங்களை மேலும் வலுப்படுத்தி தமிழரின் விடுதலையை வென்றெடுக்க அணிதிரள வேண்டும்

Wednesday, April 15, 2009

புதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு வழி செய்யுமா?


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் "பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை' கைப்பற்றுவதற்கான இறுதிக் கட்ட முயற்சிகளில் அரச படைகள் இறங்கியிருக்கின்றன. புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதி முற்றாகப் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது புலிகள் வசம் 18 சதுர கி.மீ பிரதேசமே எஞ்சியிருப்பதாகவும், அதைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் படையினர் இறங்கியிருப்பதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிலும் 53ஆவது டிவிசன், 55ஆவது டிவிசன், 58ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், 68ஆவது டிவிசன் என இராணுவத்தின் ஐந்து டிவிசன்கள் எல்லையிட்டு நிற்கின்றன.

இதற்கடுத்த நிலையில் 57ஆவது டிவிசன், 62ஆவது டிவிசன், 63ஆவது டிவிசன், 64ஆவது டிவிசன் ஆகிய நான்கு டிவிசன்கள் இரண்டாவது கட்ட பாதுகாப்பு நிலைகளை அமைத்து நிலைகொண்டிருக்கின்றன.

59ஆவது டிவிசன் வட்டுவாகல் பாலத்துக்குத் தெற்கே நிலைகொண்டிருப்பினும் அது வலிந்த தாக்குதல்களை நடத்தும் நோக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை நந்திக் கடலோரமாக முன்னகர்ந்த 53ஆவது டிவிசனின் எயர் மொபைல் பிரிகேட் மற்றும் 681 பிரிகேட் என்பன இப்போது முள்ளிவாய்க்கால் பகுதியை நெருங்கி நிலைகொண்டிருக்கின்றன.

இதற்கடுத்து அம்பலவன்பொக்கணைப் பகுதியை நெருங்கி 58ஆவது டிவிசன் நிலைகொண்டிருக்கிறது. புதுமாத்தளனுக்குத் தெற்கே பாதுகாப்பு வலயத்துக்கு அருகே முன்னேறியிருக்கிறது 55ஆவது டிவிசன்.

இந்த நான்கு டிவிசன்களும் எப்போதும் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என்ற நிலையே இந்தப் பத்தியை எழுதும் வரை இருந்தது. ஏற்கனவே பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை மீட்கும் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டதாகப் படைத்தரப்பு கூறியிருந்தாலும் அது முழுவேகத்தில் நடக்கின்ற முயற்சியாகத் தெரியவில்லை.

ஆனால், பொதுமக்கள் வாழும் பிரதேசத்தில் இருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவில் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அவர்கள் பெருந்தொகையில் ஒலிபெருக்கிகளை முன்னரங்கில் பொருத்தி சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதுடன் தமது பிரதேசத்துக்குள் வருமாறும் அடிக்கடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற பாடல் அடிக்கடி திரும்பத் திரும்ப ஒலிக்க விடப்படுகிறது.

அதேவேளை அடுத்த சில தினங்களில் பெருந்தொகையான மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவர முடியும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இது இந்த நிலையில் இருக்க, கடந்தவாரம் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற பெரும் சமர் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்களில் கருதப்படுகிறது. இனிமேல் புலிகளால் தலையெடுக்க முடியாதென்ற அளவுக்கு அவர்களின் முதுகெலும்பை முறித்து விட்டதாகக் கூட அவர்களிடத்தில் அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. இது எந்தளவுக்கு சரியானது என்பதைக் காலப்போக்கில் தான் அறிந்து கொள்ள முடியும்.

கடந்த 4ஆம் ,5ஆம் திகதிகளில் ஆனந்தபுரம் பகுதியில் சிலநூறு சதுர மீற்றர் பிரதேசத்துக்குள் சிக்கியிருந்த, புலிகளை அழிக்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை இலங்கையின் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிராத ஒன்றாகும்.

இதற்கு முன்னர் இலங்கை இராணுவம் பாரியளவிலான வலிந்த தாக்குதல்கள் பலவற்றை நடத்தியிருப்பினும் அது பல கி.மீற்றர் பரந்த பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஒரு சதுர கி.மீற்றருக்கும் குறைந்த பிரதேசத்துக்குள் அதிகளவு படையினர் களமிறக்கப்பட்ட தாக்குதல் ஆனந்தபுரம் பெரும்சமர் தான்.

இந்தத் தாக்குதலின் ஆரம்பத்தில் சுமார் 10 வரையான பற்றாலியன்களைச் சேர்ந்த படையினரே ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் உள்ளேயிருந்த புலிகளின் எதிர்ப்பு அதிகமாக அதிகமாக படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக நடவடிக்கை முற்றுப் பெற்றபோது குறைந்தது 15 ஆயிரம் படையினரேனும் அந்தப் பகுதியில் இருந்திருக்கின்றனர்.

முதற்கட்டமாக லெப்.கேணல் அத்துல கொடிப்பிலி தலைமையிலான 1ஆவது விசேட படைப்பிரிவு,

லெப்.கேணல் ஜெயந்த பாலசூரியவின் தலைமையிலான 2ஆவது கொமாண்டோ றெஜிமென்ட் ஆகியவற்றுடன்

லெப்.கேணல் வஜிர வெலகெதரவின் தலைமையிலான 8ஆவது கெமுனுவோச்,

லெப்.கேணல் லால் சந்திரசிறியின் தலைமையிலான 9ஆவது கெமுனுவோச்,

மேஜர் சம்பத் எக்கநாயக்கவின் தலைமையிலான 12ஆவது கெமுனு வோச்,

லெப்.கேணல் மணிந்திரவின் தலைமையிலான 6ஆவது கஜபா றெஜிமென்ட்,

லெப்.கேணல் சந்திர விக்கிரமசிங்கவின் தலைமையிலான 8ஆவது கஜபா றெஜிமென்ட்,

லெப்.கேணல் குமார பீரிஸின் தலைமையிலான 20ஆவது கஜபா றெஜிமென்ட் ஆகியன தேடியழிப்பு நடவடிக்கையில் இறக்கப்பட்டன.

அதேவேளை 11ஆவது இலகு காலாட்படைப் பிரிவும், 5ஆவது விஜயபா காலாட்படைப்பிரிவும் முற்றுகையை உடைத்துக் கொண்டு புலிகளை வெளியேறிச் செல்ல விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

புலிகளின் வலு முற்றுகை வலயத்துக்குள் அதிகமாக இருந்ததால் மேலதிக படையினரைக் களமிறக்கப் படைத்தலைமை தீர்மானித்தது.

53ஆவது டிவிசன் எயர் மொபைல் பிரிகேட்டைச் சேர்ந்த லெப்.கேணல் அஜந்த விஜேசூரியவின் தலைமையிலான 1ஆவது கெமுனுவோச், மற்றும் 2ஆவது விசேட படைப்பிரிவு, 1ஆவது கஜபா, லெப்.கேணல் சமிந்த லாமஹேவவின் தலைமையிலான 7வது கெமுனுவோச் ஆகியவற்றைப் புதிதாகக் களமிறக்கியது.

அதேவேளை 58ஆவது டிவிசன் மேலதிகமாக லெப்.கேணல் சாலிய அமுனுகமவின் தலைமையிலான 12ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் பலேகும்புரவின் தலைமையிலான 14ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் கமால் பின்னவெலவின் தலைமையிலான 6ஆவது கெமுனுவோச், லெப்.கேணல் உபுல் சேனாரத் தலைமையிலான 4ஆவது கெமுனுவோச், 20ஆவது இலகு காலாட்படை ஆகியவற்றைக் களமிறக்கியது.

55ஆவது டிவிசன், 57ஆவது டிவிசன், 63ஆவது டிவிசன், 64ஆவது டிவிசன் ஆகியவற்றில் இருந்து அவசர அவசரமாகப் படையினர் கொண்டு வரப்பட்டு சண்டையில் இறக்கப்பட்டனர்.

இவற்றை விட லெப்.கேணல் நிகால் சமரக்கோனின் 5ஆவது கவசப்படைப்பிரிவு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தியது. அத்துடன் பிரிகேடியர் நாபாகொடவின் தலைமையிலான ஆட்டிலறிப் படைப்பிரிவு இரவு பகலாக குண்டுமழை பொழிந்து உதவியது.

இந்தத் தாக்குதலில் பங்கெடுத்த துணைச் சேவைப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை தனி. புலிகளை முற்றுகையிட்டுத் தாக்கியழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட இராணுவ பற்றாலியன்களின் மொத்த எண்ணிக்கை 20 இற்கும் அதிகம் என்பது ஆச்சரியமளிக்கும் விடயம்.

சிறிய பகுதிக்குள் குறைந்தது 12ஆயிரம் காலாட்படையினரைக் கொண்டே இந்த அழித்தொழிப்புச் சமரைப் படைத்தரப்பு நடத்தியது.

இந்த அழித்தொழிப்பு நடவடிக்கையில் பங்கேற்ற பற்றாலியன்கள் அத்தனையும் சிறப்புப் பயிற்சி பெற்றது. அனுபவம் மிக்கது.

இராணுவத்தின் அனுபவம் மிக்க படைப்பிரிவுகள் அனைத்தும் களமிறக்கப்பட வேண்டியளவுக்கு அது கடினமான களமுனையாக இருந்தது.

அத்துடன் இந்தச் சமரில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட சேதங்களும் மிகமிக அதிகமென்றே தகவல்கள் கூறுகின்றன. படைத்தரப்போ புலிகளோ தமக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி எதுவும் கூறவில்லை.

புலிகள் தரப்பில் 525 பேரின் சடலங்களை கைப்பற்றியதாகக் கூறியிருந்தது படைத்தலைமை. புலிகள் தரப்பில் கொல்லப்பட்டதாக, பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவித்த கேணல் தீபன், மாலதி படையணி சிறப்புத் தளபதி கேணல் விதுசா, சோதியா படையணி சிறப்புத் தளபதி கேணல் துர்க்கா, படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் கடாபி ஆகியோர் மூத்த தளபதிகளாகச் செயற்பட்டவர்கள்.

இவர்களில் துர்க்கா தவிர்ந்த ஏனைய மூவரும் ஜெயசிக்குறு காலத்திலேயே கேணல் நிலைத் தளபதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். தீச்சுவாலை முறியடிப்புச் சமரை அடுத்து 2001இல் துர்க்காவும் கேணலாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இவர்களைவிட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தளபதி நாகேஸ், ஜெயந்தன் படையணி சிறப்புத் தளபதி கீர்த்தி, கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி மணிவண்ணன், குட்டிசிறி மோட்டார் படையணியின் சிறப்புத் தளபதி கோபால், மணலாறு பகுதி தளபதிகளான சித்திராங்கன், ஆதித்யன், ராதா படையணித் தளபதி சிலம்பரசன், சோதியா படையணியின் தளபதி மோகனா, மற்றும் தளபதி ரூபன் என கொல்லப்பட்ட புலிகளின் தளபதிகள் என்று பட்டியலைக் காட்டியது படைத்தரப்பு.

தாக்குதல் நடந்து பல நாட்கள் கழிந்த நிலையில் குட்டிறிசிறி மோட்டார் படையணியைச் சேர்ந்த அமுதா, ராதா படையணியின் சிரேஷ்ட தளபதி இனியவன், திருமலை புலனாய்வு பிரிவு தலைவர் அன்ரன், புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த மாங்குயில், நேரு என்று கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ராதா படையணித் துணைத் தளபதி அன்பு, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு தளபதியான அஸ்வினி போன்றோர் கொல்லப்பட்டதாக இராணுவ இணையத்தளம் கூறியிருந்த போதும் இவர்கள் காயமடைந்தாக தகவல் வெளியிட்டிருந்தது பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்.

படைதரப்பு வெளியிட்ட இந்தத் தகவலைப் புலிகள் ஏற்கவோ மறுக்கவோ இல்லை. புலிகளின் இத்தனை தளபதிகளும் இறந்தது உண்மையானால் அது புலிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும்.

சுபத்ரா

Tuesday, April 14, 2009

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …


நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.

நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.


சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.

மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.


விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்

பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.

சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.


நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.


கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு


இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.

எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.


எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.

சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.

மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரை, எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.


எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பiயும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.


இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.

உழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.

நாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.

சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.


எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.

அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.

தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.

ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.

எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.

குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.

தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.

விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.

இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்

Sunday, April 12, 2009

தமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்: அநீதியின் பக்கமிருக்கும் இந்தியா

'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய இராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால், புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள், சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.

இந்திய இராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய இராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம், விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சி, பூநகரி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு இரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிங்கள இராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பது, எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள இராணுவம் மீட்டு வைத்திருந்தபோது, பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தாவில் என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து ஆனையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள இராணுவம் அஞ்சுகிறது.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில், இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் இரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழு, ஒரு மருத்துவமனையையே நிறுவியது.

இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயக, 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார். அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல், 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார்.

சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த இராணுவ அதிகாரி ஒருவர், 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய இராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதைய போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார்.

இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள், இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.

''சிங்கள இராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய இராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறது.

இந்தப் படைகள் ஒருசேர முல்லைத்தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால், இந்திய இராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள்.

இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன், 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடி, 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள இராணுவம்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள்.

தமிழ் ஆர்வலர்களோ, ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய இராணுவம், இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சதீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப்பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில், ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் அரசோ, ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது. மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ?

- இரா. சரவணன்

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.